திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சுற்றுலா வாகனம் மீது லாரி மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற இக்கோ வாகனம் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி கோர விபத்து. சுற்றுலா வாகனத்தில் 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில், 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கியாஸ் சிலிண்டர் லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் சம்பவ இடத்தில் பலி ஆறு வயது குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்,
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, குதிரட்டிப்பட்டி, புச்சிரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள், ஊட்டிக்கு சுற்றுல்லா செல்ல தங்களது ஈகோ காரில் பயணித்துள்ளனர். சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலை யில் செங்கப்பள்ளி அருகே கார் சென்று கொண்டிருக்கையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நின்றுகொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது பக்கவாட்டில் மோதி வேகமாக மோதி விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்தானது விபத்து நடைபெற்ற எதிர்ப்பகுதியில் இருந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதில் இதில் காரில் பயணித்த எட்டு பேரில் குமார்(36), விஜய்(30), தேன்மொழி(30) விபத்தில் என 3 பேர் சம்பவ இடத்தில் இறந்துள்ளனர்.
மேலும் குமார், விஜய் ஆகியோரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டனர்.
இறந்த தேன்மொழி உடலை ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
காரில் பயணம் செய்த இறந்த குமார் மகள் சுபஸ்ரீ (6) தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காயமுற்ற நான்கு பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொச்சின் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இதே போல பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது லாரி ஓட்டுநர்கள் சாலையோரமாக எவ்வித பாதுகாப்பு லாரியை நிறுத்தி செல்வதால் இந்த விபத்து தொடர்ந்து ஏற்படுகிறது என்ற பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.