ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒரே அணியில் ஒரு குடையின் அமித்ஷா ஒருங்கிணைத்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுகவை வீழ்த்த ஜெ. தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கொண்டுள்ளார் என்று கூறினார்.

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், திமுகவை எதிர்க்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதன் மூலம் வாக்குகள் சிதறாமல் மாபெரும் வெற்றி பெற முடியும் என்றும் திமுகவை வீழ்த்த விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் தான் தொடர்கிறோம்! அமித்ஷா அழைக்காதது வருத்தம்.. மனம் திறந்த OPS..!

தக் லைஃப் பட சர்ச்சை குறித்து பேசிய அவர், கமல் பேசியதில் தவறில்லை என்றும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்து இருக்கலாம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிரதமரின் பயம் தான் காரணம்... ராகுல்காந்தி சரமாரி புகார்!