கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து கட்சியினருக்கும் பிரச்சாரம் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறி செல்ல உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக வெற்றிக்கழகத்திற்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததுடன் கண்டனத்தையும் பதிவு செய்தார். விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்றும் ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை., என்ன மாதிரியான கட்சி இது., என்று கேட்டார்
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று காட்டமாக தெரிவித்த நீதிபதி, சம்பவம் நடந்தவுடன் தமிழக வெற்றி கழகத்தினர் அங்கிருந்து பறந்து விட்டதாகவும், தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவித்தார். ஹிட் அண்ட் ரன் வழக்கு பதியப்பட்டதா என்றும் விஜய் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்றும் ஏன் இந்த தாமதம் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசுக்கு முன் வைத்தார்.

ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் கரூர் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா என்றும் கேட்டார். அனாவசியமாக யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றும் கரூர் வழக்கில் நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். விஜயை கைது செய்யும் நிலை வந்தால் நிச்சயம் கைது செய்வோம் என்றும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: WAIT & SEE... அமைதி வெற்றிக்கான அறிகுறி... சூசகமாக பேசிய செங்கோட்டையன்...!
இந்த நிலையில் விஜயை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகி விடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கரூர் அசம்பாவிதத்திற்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தால் மற்றொரு வாகனத்தில் செல்ல முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார். ஆம்புலன்ஸ் செல்வதற்கெல்லாம் காரணம் கற்பிப்பதை ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேசி வருவதாக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், பழனிச்சாமி தலைமையை ஏற்று எப்படி அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம் என குள்ளநரித்தனமாக நாகரீகம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும், இந்த விவகாரத்தில் நடுநிலையோடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இனி ADMK கிடையாது என்றும் அந்த கட்சி EDMK தான் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!