வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

நெருங்கும் SIR… அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு…!

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 65 லட்சத்திற்கும் மேலான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது.

ஆனால் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.

இதையும் படிங்க: களமாடும் நேரம் இது! நவம்பர் 5ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்… விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியது. அதன்படி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சியையும், உரிமைகளையும், தமிழக எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்பதாக தவெக உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தலுக்கு ஃபுல் பாமில் தயாராகும் விஜய்… இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு…! 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी