தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கினார். கடந்த மாதம் 13ஆம் தேதி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கி இருந்தார். அதன் தொடர்ந்து அரியலூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நடத்தினார். இதில் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய், சிக்கலுக்கு ஆளானார்.
அவரது சுற்றுப்பயணத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக நாமக்கல்லிலும் விஜய் பிரச்சாரம் நடத்தி இருந்தார். நாமக்கல் பிரச்சாரத்தின் போது தனியார் மருத்துவமனையை தமிழக வெற்றி கழகத்தினர் அடித்து உடைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பொது சொத்துக்களை தமிழக வெற்றி கழகத்தினர் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்தபோது, தமிழக வெற்றி கழகத்தினர் தனியார் மருத்துவமனையையும், பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை ஆதாரங்களாக கொடுத்தனர். அப்போது தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடியில் ஈடுபட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கட்சியினர் அடாவடியில் ஈடுபட்டிருந்த நிலையில் எதுவும் தெரியாது என எப்படி கூறுவீர்கள் என்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி! விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு... தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இதெல்லாம் தலைவன் செய்யுற வேலையா... கோழைத்தனம்! விஜயை விமர்சித்த நடிகர் S.V. சேகர்...!