தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகி இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மதியழகன் கைது செய்யப்பட்டார். அடுத்து பவுன் ராஜ் என்ற நிர்வாகியும் கைதாகினார். சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு என்றும் அஜித் குமார் லாக்கப் டெத் போல் என் கணவருக்கு எந்த சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் கைது செய்யப்பட்ட கரூர் தவெக மாவட்டச்
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் எதிரொலி… தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…!
செயலாளர் மதியழகன் மனைவி கூறி இருந்தார். தவெக நிர்வாகிகள் இருவரையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்ட நீதிபதி, தவெக நிர்வாகிகள் 2 பேருக்கும் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த மதியழகன் மனைவி, நீதிமன்ற காவல் வழங்கிய உத்தரவைக் கேட்டதும் கதறி அழுதார்.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... அதிரடி காட்டும் போலீஸ்... முந்திக்கொண்ட தவெக முக்கிய தலைகள்...!