சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உருட்டுவதாக தமிழக வெற்றிக்கழகம் விமர்சித்துள்ளது. ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார் என்றும் கூறியுள்ளது. அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி என்றும் விமர்சித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெளிவாகப் பதில் கொடுத்தார் என்றும் ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி என்றும் தெரிவித்து உள்ளது. போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார்.

ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது என்றும் தெரிவித்தது. Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது என்றும்
இதையும் படிங்க: உதயநிதி பாக்காம போய்ட்டாரே..! அன்று ஒமுக... இன்று வெமுக..! கலாய்த்து தள்ளும் தவெகவினர்..!
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது எனவும் கூறியுள்ளது. ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும் என்றும் கூறியது.
இதையும் படிங்க: பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!