கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பரிதாபத்தை விட தற்போது தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு பக்கம் விஜய்க்கு எப்படியாவது உதவிக்கரம் நீட்டி கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என பாஜக தரப்பு துடியாய் துடித்து வருகிறது. இன்னொரு பக்கம் தமிழக காங்கிரஸில் உள்ள மூத்த தலைகள் சில டெல்லிக்கே சென்று தவெகவுடன் கூட்டணி வைத்தால் நமது எதிர்காலம் பிரைட்டாக இருக்கும் என ராகுல் காந்தியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருந்தாலும், தொகுதி பங்கீடு விவகாரத்தில் இருதரப்பினர் இடையே உரசல் நீடித்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பில் தேமுதிக, பாமக போன்ற புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்தால் காங்கிரஸுக்கான சீட்களின் எண்ணிக்கை குறையும் எனக்கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
இருப்பினும் ராகுல் காந்தியைப் பொறுத்தவரை திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராக இல்லையாம். ஒருபக்கம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தாலும், அவருக்கு எதிர் அணியில் இருக்கும் காங்கிரஸ் சீனியர்கள் தலைமையைச் சந்தித்து தவெகவுடன் கூட்டணி வைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற தெளிவான ரிப்போர்ட்டை ராகுல் கையில் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தென் அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம்.. காரணம் இதுதானாம்..!!
இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் போனில் பேசியதாக வெளியாகியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியும், விஜய்யும் நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் அரசியல் தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கரூர் விவகாரத்தில் கூட சட்ட ரீதியிலான உதவிக்காக ராகுல் காந்தியுடன் விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏனெனில் கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாம். யாருடைய ரெக்கமெண்டேஷன் வந்தாலும் அதை ஏத்துக்க மாட்டோம், சட்டப்படியாகதான் நாங்க போவோம் அப்படிங்கறதுல திமுக உறுதியா இருக்காங்க. அதனாலதான் தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச்செயலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்காம். சட்டப்படி கோர்ட் சொல்றதுதான் நாங்க செய்வோம் அப்படிங்கறதுல உறுதியா இருக்காங்க. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உதவியை விஜய் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
கொள்கை எதிரி எனக்கூறிய பாஜகவுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லையாம். அதனால் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க விஜய்க்கு ஒரு ஐடியா இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது விஜய் ஒரே ஒரு கன்டிஷனை மட்டும் ராகுல் காந்தியிடம் விஜய் வைத்துள்ளாராம். அதாவது கரூர் சம்பவத்தில் தனது பெயரில் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடாது, தொடர்புபடுத்தக்கூடாது என்ற கன்டிஷனை முன்வைத்துள்ளார். இதற்கு ராகுல் காந்தி தரப்பில் தவெகவிற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், அஞ்ச வேண்டாம் என கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!