• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பியூஸ் கோயலுக்கு அருகதை இல்லை... பாஜகவை ஒரு போடு போட்ட தவெக சிடிஆர் நிர்மல் குமார்...!

    2024 தேர்தல் வரை அதிமுக தனித்துவம் இருந்ததாக உணர்ந்தோம் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து டெல்லிக்கு சென்றார்களோ அவர்கள் தொண்டர்களே அவர்களுடன் இல்லை.
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 20:23:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK CTR Nirmal Kumar slams BJP

    திருப்பரங்குன்றம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரும் தமிழக  வெற்றிக் கழக இணை பொதுச் செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார்  திருப்பரங்குன்றத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களுக்கு எல்லா இடங்களிலும்  திமுகவினர் அப்ஜக்ஷன் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தாண்டி அனைத்து  வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

    நாளை எங்கள் தலைவரின் பிரச்சாரம் பல போராட்டங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்துள்ளது. நிறைய இடங்களில் தலைவர் சுற்றுப்பயணம் திட்டம் அனுமதி கேட்டதற்கு தேதியை மாற்ற சொல்லி பல காரணங்கள் கூறினார்கள். நாளை திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது தான் போராட்டமாக உள்ளது. 

    பூத் நிர்வாகிகள்  வீடு வீடாக சென்று  பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி தேவை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் காவல்துறையினர் ஒரு வருடங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிகிறார்கள். 

    இதையும் படிங்க: அதிமுகவில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்! மதுரையில் சசிகலா ஆக்ரோஷ பேச்சு!

    எங்களுக்கு மட்டும் அனுமதியில் பிரச்சனை உள்ளது மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் தெரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

    மதுரையில் தலைவர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் வரவில்லை வந்தவுடன் தேதியை சொல்கிறோம். இப்போதைக்கு புதுக்கோட்டையிலும், தர்மபுரியிலும் தேதியை மாற்ற சொல்லி காவல்துறை சொல்லி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். விண்ணப்பித்த இரண்டு மணி நேரத்திலேயே சொல்லி இருக்கலாம்.

    வேட்பாளர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தால் பிரச்சாரத்தில் இருந்திருப்பார்கள். வேட்பாளர் சரிபார்க்கும் இடத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்று அவசியம் இல்லை.  வேட்பாளர் மாற்றத்தில் அழுத்தம் இல்லை. 234 பேரில் நாங்கள் ஒன்று இரண்டு என்று மாற்றுவது பெரிய மாற்றமில்லை. 

    40% வாக்குகள் தெளிவாக உள்ளது அதில் என்ற மாற்றமும் இல்லை. வித்தியாசமான தேர்தல் ஆக இருக்கும்.  அனைத்து தொகுதியும் சமமாக உள்ளது எங்குமே  வலு இல்லாமல் இல்லை.  பங்கு சந்தை குறித்த விவரங்கள் எனது  வேட்பு மனுவல் உள்ளது அதை அவர்கள் தெரிந்து கொள்ளாததால் அப்ஜக்ஷன் செய்தார்கள். 

    சாலையில் நடைபெறும் பிரச்சாரத்தை காவல்துறை தான் கட்டுப்படுத்த முடியும் திருச்சியில் காவல்துறை சரியாக கட்டுப்படுத்தினார்கள் தலைவர் பிரச்சார வாகனத்திற்கு பின்பு யாரையும் அனுமதிக்கவில்லை. அதேபோல் காவல்துறை தான் அதை செய்ய முடியும் நாங்கள் அதை செய்ய முடியாது.

    அதிமுக எனும் கட்சி எந்த மாதிரி இடத்தில் உள்ளது என எல்லாருக்கும் தெரியும் 2024 தேர்தல் வரை அவர்களுக்கு தனித்துவம் இருந்ததாக உணர்ந்தோம் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து டெல்லிக்கு சென்றார்களோ அவர்கள் தொண்டர்களே அவர்களுடன் இல்லை. அவர்களின் வாக்குறுதிகளை கூட யாரும் கண்டு கொள்ளவில்லை அவர்கள் 20 தொகுதி ஜெயிச்சாலே பெரிய விஷயம்தான். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டதாக அதிமுக தொண்டர்களை பேசுகிறார்கள்.

    கட்சி பொதுச் செயலாளர்களுக்கு ஒரு மரியாதை உள்ளது ஆனால் டெல்லியில் இருந்து அழைப்பு வந்தவுடன் அடுத்த நிமிடம் டெல்லிக்கு போடுவது யாரும் பார்த்ததில்லை அவரைக் காப்பாற்றுவதற்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார் அவர் எங்களைப் பற்றி பேசுவது சரியில்லை. அதிமுகவிற்கு தமிழக அரசியலில் இடமில்லை. திமுகவுக்கு எங்களுக்கும் தான் போட்டி. 

    முன்னாள் அமைச்சர்கள் பதட்டத்தில் தான் இருக்கிறார்கள். உண்மையான நிலவரம் அவர்களுக்கு தெரியும். கட்சி தொடங்குவதற்கு முன்பே சீமான் நான் தம்பி வருவதாக சொன்னார் அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்தார்கள் ஆனால் எங்கும் சமரசமாகி விடக்கூடாது என தெளிவாக இருந்தோம். பாஜக குறித்த நிலைப்பாடில் எப்போதும் மாறவில்லை. 

    பாஜகவும் ஸ்டாலினும் மறைமுக உறவில் இருப்பதாக மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறார். முதல்வராக இருந்த அரவிந்த்  கெஜ்ரிவாலை கைது செய்த மத்திய அரசு தமிழக அமைச்சர்களை ஏன் கைது செய்யவில்லை. அப்படி என்றால் இவர்களுக்குள் என்ன மாதிரியான உறவு உள்ளது. 

    பாஜக திமுக மறைமுக கூட்டணியாக உள்ளது. அதிமுக நேரடியாக அடிமையாக உள்ளது. பிரதமர் தமிழக வரும்போது எப்போது முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் அவர் வரும்போதெல்லாம் முகம் சுழிக்காமல் விருந்தோம்பல் செய்துதான் அனுப்பி வைத்திருக்கிறார் தமிழக மக்கள் கோரிக்கை குறித்து பேசி இருக்கிறாரா அவர் சென்ற பிறகு கவர்னரை மாற்ற சொன்னார்கள். ஐந்து ஆண்டுகளாக கவர்னர் எதிர்த்து தான் பேசினார்கள். ஆளுநரை எதிர்த்து பேசக்கூடாது பிரதமரை எதிர்த்து பேசி இருக்க வேண்டும். இப்போது ஆளுநரை மாற்றிவிட்டார்கள் நீங்கள் யாரை பேசுவீர்கள். சிறுபான்மை மக்கள் வாக்குகளை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

    பியூஸ் கோயலுக்கு தமிழக அரசியலைப் பற்றி என்ன தெரியும். நேற்று மகாராஷ்டிரா முதல்வரை அழைத்து வீட்டு மன தாக்கல் செய்கிறார்கள். அவருக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம். அவர்களின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை. மதுரை தெற்கில் இருக்கும் மக்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் என்றால் தெரியுமா, மக்கள் வடநாட்டில் இருந்து யாரோ வந்திருக்கிறதாக சொல்கிறார்கள். பியூஸ் கோயில் வட இந்தியாவில் வியாபாரியாக இருக்கலாம் தமிழகத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமென்றால் பின்னால் கையை கட்டி இருக்கலாம். நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். பியூஷ் கோயல் வந்து அதிமுகவை வழிநடத்த தொடங்கிய பிறகு தான் அதிமுக ஒன்னும் இல்லாமல் போனதற்கு காரணம். சமரசம் என்பது எங்கள் தலைவரிடம் எந்த விஷயத்திலும் இல்லை. திமுகவை போல் மறைமுக கூட்டணியோர் அதிமுகவை போல நேரடி அடிமையோ இல்லை. 

    உங்களுக்கு இது முதல் தேர்தல் ஆண்களுக்கான கொள்கை கோட்பாடுகளுடன் பயணிக்கிறோம் அதில் யார் சரியாக இருக்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் பயணிக்கலாம். ஊழல்வாதிகளோ, கொள்கைக்கு எதிரான அவர்களுடன் பயணிக்க முடியாது.

    எங்களுக்கு மட்டும்தான் நாற்பது சதவீதம் உள்ளது. சீமானுக்கு இரண்டு சதவீதம் தான் உள்ளது. அரசியலில் ஒரு சீட்டு கூட வெள்ளை மட்டும் என்பது அவருக்கே தெரியும். வாழ்க்கை எங்களுக்கு அதிகமாக இருப்பதால் எங்களால் தான் திமுகவிற்கு ஆபத்து அதனால் தான் எங்களுக்கு பிரச்சினை கொடுக்கிறார்கள். 

    வருங்காலத்தில் கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அப்போது பரிசீலைக்கலாம் ஆனால் யாருடன் கூட்டணி இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். திருமாவளவன் அண்ணன் பாவம் என்று திமுகவிற்கு சென்றார்களோ அன்றே அவர்கள் தனித்துவத்தை இழந்து விட்டார்.

     தலித் மக்களின் உறுப்பினராக இருந்தவர் இன்று திமுகவிற்கு வேலை செய்கிறார் கடந்த ஆண்டு எங்கள் கட்சி புத்தக வெளியீட்டும்போது திமுக சொன்ன ஒரு வார்த்தைக்காக பயந்து வராமல் இருந்து விட்டார். அறிவாலயம் சொல்வதை கேட்டு செய்கிறார். திமுக கூட்டணி இருப்பவர்கள் தனியாக சுயமாக செயல்பட முடியாது  திமுகவின் அணியாக தான் செயல்பட முடியும்.

    இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது மகிழ்ச்சி! ராமபுரத்தில் டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்
    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    இந்தியா
    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்
    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    இந்தியா
    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share