வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா கொளத்தூர் திமுக கோட்டை..?

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளி வி.எஸ் பாபு முன்னிலை பெற்று வருகிறார்.

கொளத்தூர் தொகுதி தமிழ்நாடு அரசியலில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 2008-ல் வரையறைக்குப் பின் உருவான இந்தத் தொகுதி, 2011 முதல் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாக இருந்து வந்தது. மூன்று முறை (2011, 2016, 2021) ஸ்டாலின் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ல் அதிமுகவின் ஆதி ராஜாராம் உடன் சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், இந்தத் தொகுதியை தனது அரசியல் செல்வாக்கின் சின்னமாகக் கருதினார்.

ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைமை மாறியது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் V.S. பாபு போட்டியிட்டு, ஸ்டாலினைப் பின்னுக்குத் தள்ளி ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. 

V.S. பாபு தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி. 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். பின்னர் அதிமுகவுடன் தொடர்பு கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்காததால், 2026 பிப்ரவரி 7-ல் தவெகவில் இணைந்தார். தவெகவின் இணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 75 வயதான இவர், கொளத்தூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

இதையும் படிங்க: #TNElectionResults2026: ஆட்டம் மாறி போச்சு..! TVK vs ADMK..! திமுகவின் பரிதாப நிலை..!!

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து வி.எஸ். பாபு முன்னிலை வகித்து வருவது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அந்தக் கோட்டையை வி.எஸ் பாபு ஆட்டம் காண வைத்ததாக கூறப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: #TNElectionResults2026: அடியோடு மாறும் அரசியல் களம்… திமுக, பாஜக, அதிமுக முக்கிய தலைகள் பின்னடைவு… தட்டித்தூக்கும் தவெக…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी