சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தை உச்சி வெயிலில் தான் நடத்த வேண்டும் என்று காவல்துறை கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வெயிலைத் தாங்க முடியாமல் தவித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவின. இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அரசு தவெகவுக்கு எதிராக வேண்டுமென்றே இப்படி செய்கிறது என்று கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இந்தச் செய்தி உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் அளித்த விளக்கத்தின்படி, கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை தவெக தரப்பிலிருந்து கோரியபோது, காவல்துறை அளித்த அனுமதி தவெக ஒருங்கிணைப்பாளர்கள் கேட்ட அதே நேரத்தில்தான் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

அதாவது, பிற்பகல் 3 மணி அல்லது அதற்கு மேல் என்ற நேரத்திலேயே கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்றும் காவல்துறை எந்தவிதமான கட்டாய நிபந்தனையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்து உள்ளது. உச்சி வெயிலில் நடத்தச் சொல்லி நிர்பந்திக்கவும் இல்லை என்றும் இந்தக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது.
இதையும் படிங்க: அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??
அங்கு வெயில் கடுமையாக இருந்தது உண்மைதான்., கூட்டத்தில் பங்கேற்ற சிலர் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கியதும், ஒருவர் உயிரிழந்ததும் நிகழ்ந்தது என்றும் கூறியது. ஆனால் இதற்கு காவல்துறையின் நிபந்தனை காரணம் என்று சொல்வது தவறு. உண்மையில், கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெக நிர்வாகிகளே கோரிய நேரத்தில்தான் நிகழ்ச்சி நடந்ததாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்..!! சென்னையில் செத்துமடியும் காகங்கள்..!! தமிழக அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு..!!