நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் வாகனத்தில் தவெக கொடிகளை ஏற்றி வந்த கும்பல் மாறி மாறி தாக்குதல்.திமுக மாவட்ட அலுவலக கேட் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் கோட்டாறிலிருந்து ஒழுகினசேரியை நோக்கி இரவு ஒரு மினி டெம்போ தவெக கொடிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது.மினிடெம்போவை ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் ஓட்டி வந்தார். மினி டெம்போ ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகம் அருகே வரும்போது பழுதாகி நின்றது. அப்போது அங்கு இந்த ஒரு கும்பல் அந்த மினி டெம்போவை தள்ளி சாலையோரம் நிறுத்தியது.
மினி டெம்போவை நிறுத்திய அந்த கும்பல் டெம்போ டிரைவரிடம் மினி டெம்போவை தள்ளியதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் டெம்போ டிரைவர் மாடசாமியை அந்த கும்பல் தாக்கியது. பின்னர் மாடசாமியை தாக்கி திமுக அலுவலக முன்புள்ள கேட்டின் மீது தள்ளியது. இதில் கேட்டு உடைந்து கீழே விழுந்தது.
இதையும் படிங்க: எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!
இதனை அறிந்ததும் திமுக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் திமுகவினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வடசேரி போலீசார் அங்கு வந்தனர்.போலீசார் திமுக கட்சி அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தவெக கொடிகளை எதற்காக எடுத்து வந்தனர், எங்கு கொண்டு செல்ல வந்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் மகேஷ் கூறும்போது,தவெக கொடிகளை ஏற்றி வந்த மினிடெம்போ மற்றும் அதில் வந்த நபர்கள் திமுக அலுவலகம் முன்பு மாறி மாறி தாக்கி திமுக அலுவலக கேட்டை உடைத்தனர். பின்னர் திமுக அலுவலகம் முன்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை,25க்கு மேற்பட்ட கொலைகள், இரட்டை கொலை, கொள்ளை நடந்திருக்கிறது. தமிழகத்தில் அத்தனை இடங்களிலும் குடித்துவிட்டு பல கலவரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது திமுக அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்! அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!