தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிதாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் தொகுதி மக்களுக்கு கிடைக்க புதிய குடிநீர் திட்ட பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் சிறுகுரு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா தகவல்
தூத்துக்குடியில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்ற ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கான அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிறுகுரு தொழிற்துறை அமைச்சர் மதன் ராஜா கூறுகையில், ..ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு திறந்து வைக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரி ஆய்வு செய்தோம். அந்த கட்டிடம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் என்ன செய்துள்ளோம் என்று ஆய்வு செய்தோம் இன்று மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதி சார்ந்த வளர்ச்சிக்காக மீண்டும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சனை பல இடங்களில் உள்ளது அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மழை காலம் வருவதால் குளங்களை தூர்வாரி பராமரிப்பு பணி மேற்கொள்வது நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஃ அதுமட்டுமின்றி மின்சாரம் பிரச்சனைகள் இல்லாமல் படிப்படியாக சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள் மேம்படுத்துவதற்கும் வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் பட்டா விரைவாக வழங்குவதற்கும் பிற சான்றிதழ்கள் உடனடியாக பொதுமக்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்குவதற்கும் ஏற்கனவே இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஆலோசனை செய்யப்பட்டது. விவசாயத்திற்கு ஆதாரமான விதைகள் விநியோகத்தை சரி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தேவையான விதைகள் மையங்கள் அமைப்பதற்காக புதிய விநியோக மையங்கள் அமைப்பதற்காக ஒரு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது .
தொடர்ந்து இந்த தொகுதியை அடுத்தடுத்த கட்டமாக வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக உள்ள ஏற்கனவே செயல்படுத்த பட்டு வரும்10 திட்டங்கள் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை அதனை மாற்றி தாமிரபரணி ஆற்று தண்ணீர் கிடைப்பதற்கான புதிய குடிநீர் திட்டங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைப்பிற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முன்னெடுப்புகள் எடுக்கப்படும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகைகுளம் அருகே ஏற்பட்ட சூறாவளி காற்றால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறு குறு நடுத்தர தொழில்கள் வரக்கூடிய காலங்களில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கும் அந்தந்த மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், முத்தமாள்காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!