சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தலைநகரின் அரசு மருத்துவமனையில் படுகொலை நிகழ்ந்துள்ளதாகவும் வன்முறைக்களமாக தமிழ்நாடு மாறுவதாகவும் தமிழக வெற்றி கழகம் குற்றம் சாட்டி உள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அரங்கேறியுள்ள படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அதுவும் பிரசவம் முடிந்து தாய்மார்கள் தங்கியிருக்கும் வார்டு அருகிலேயே இக்கொடூரம் நிகழ்ந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் உன்னத இடமான மருத்துவமனையிலேயே, உயிரைப் பறிக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்திருப்பது, இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்று எனவும் கூறியது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் வெடிகுண்டு வீச்சு, பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை, தற்போது மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட படுகொலை எனத் தலைநகர் சென்னை இன்று வன்முறையாளர்களின் புகலிடமாக மாறியுள்ளதாகவும், இத்தனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், திமுக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? 86 கேள்விகள்..! 3 மணி நேரமாக விஜயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விடுத்து, சுயவிளம்பர விழாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி, தமிழகத்தின் தலைநகரமே வன்முறைக்காடாக மாறுவதை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!