தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரா என்பவருக்கு எதிராக லஞ்சம் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியான இந்த வீடியோவில், ஒரு ஒப்பந்ததாரர் வீராவின் அலுவலகத்தில் அவரிடம் ரூ.1.30 லட்சம் பணத்தை ஜிபே (UPI) மூலம் அளிப்பது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் த.வெ.க.வுக்குள் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. வீடியோவில் காட்சியாகும் நிகழ்வு மாம்பாக்கம் பகுதியில் உள்ள வீராவின் அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சாலைப் பணிகள் தொடர்பான ஒப்பந்ததாரர் ஒருவர், பணிகளுக்கான தொகை விடுவிப்பு சம்பந்தமாக வீராவைச் சந்தித்தபோது இந்தப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

வீடியோ பரவிய சில மணி நேரங்களுக்குள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இது பெரும் கவனத்தைப் பெற்றது. பலர் இதை த.வெ.க.வின் ஊழல் முகமாகச் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக இருந்த வீராசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: வந்தே மாதரத்தை எதிர்க்காதது ஏன்.? அத்துமீறும் மத்திய அரசு... அமைதி காக்கும் தவெக.. சீமான் காட்டம்..!!
லஞ்சம் வாங்கிய வீடியோ இணையதளங்களில் பறவை நிலையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வீரா என்ற வீராசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஒப்பந்ததாரரிடம் இருந்து வீராச்சாமி லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோவை அடுத்து தமிழக வெற்றிக்கழகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தலைமை செயலாளர் சாய்குமார் பணிக்காலம் நீட்டிப்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!