தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்யின் கட்சி பிரசாரங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது ஆதரவாளர்கள் மத்தியில் "வீடு தோறும் விஜய் களத்தில், வீட்டுக்கு ஒரு விஜய்" என்ற வாசகம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது ஒரு வகையில், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவர் விஜய்யுக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாகவும், அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் தங்கள் குடும்பத்தினரை, அக்கம் பக்கத்தினரை, உறவினர்களை வாக்குரிமை பதிவு செய்யவும் உறுதிப்படுத்தவும் தூண்டுவதாகவும் கருதப்படுகிறது.
இந்தக் கருத்து தவெகவின் பிரசார ஸ்டிக்கர்கள், வாகன அணிவகுப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த வாசகத்துடன் கூடிய பிரசார நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது விஜய்யின் புகழ் மற்றும் ரசிகர் பலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் அவரது ஆதரவாளர்கள் மூலம் வாக்குகளைத் திரட்டும் உத்தியாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அவர் பேசியபோது, "வீட்டுக்கு ஒருவர் அந்த நடிகருக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்று பேசி வருகிறார்கள். நன்றாக நடனம் ஆடுகிறார், பாட்டுக்கு உதடு அசைக்கிறார் என்பதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!
அவரைப் போன்றவரை முதலமைச்சராக எப்படி என்னால் எண்ணிப் பார்க்க முடியும்? புரிதலற்ற சமூகமாக இளம் தலைமுறை மாறியதாலேயே இந்த நிலை" என்று காட்டமாக விமர்சித்தார். இது விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரது ரசிகர்களின் ஆதரவை வெறும் புகழ் அடிப்படையிலானது என்றும், அரசியல் புரிதல் இல்லாத இளைஞர்களால் ஏற்பட்ட நிலை என்றும் சாடியது.
இதையும் படிங்க: அப்பாவி ஊழியர்களுக்கு சிறை... குரலை நசுக்கும் திமுக...!! TVK டைரக்ட் அட்டாக்..!!