தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதிலிருந்து திமுக ஆட்சியையும், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. விஜய், தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு இடைவிடை செய்தாலும், அவரது பேச்சுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஸ்டாலின் ஆட்சியின் பல துறைகளை இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறார்.
இந்த விமர்சனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தளத்தில் TVK-ஐ முதன்மை எதிர்க்கட்சியாக உயர்த்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன. திமுக, அதிமுக, பாஜக போன்ற பழைய கட்சிகளுக்கு இடையில் TVK, இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவைப் பெற முயல்கிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் கட்சி பணிகளை தவெக தீவிரப்படுத்தி வருகிறது.

நிர்வாகக் குழு கூட்டம், சிறப்பு செயற்குழு கூட்டங்களை தவெக நடத்தி உள்ளது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கோரி தமிழக வெற்றி கழகம் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளிநாடியுள்ளது.
இதையும் படிங்க: சகட்டுமேனிக்கு பேசிய விஜய்... என்ன ஒரு பித்தலாட்டம்! வைகோ காட்டம்...!
பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மனு அளிப்பதற்காக இன்று ஆதவ் அர்ஜுனா டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. விசில், கிரிக்கெட் பேட், கப்பல், ஆட்டோ போன்றவை தமிழக வெற்றிக்கழகம் சின்னமாக கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரோடு ஷோ தேவையே இல்ல... தடை பண்ணுங்க... திருமாவளவன் காட்டம்...!