தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவுடன், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சாரம், தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். கட்சியின் தேர்தல் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தீவிரமடைந்தன. ஜனவரி 2026-ல் விஜய், தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்தார். இந்தக் குழு மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் பிரச்சார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றது. பிப்ரவரியில் தேர்தல் அறிக்கை உருவாக்கும் பணிகள் வேகம் பெற்றன.

மார்ச் இறுதியில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜய் அனல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: சர்ச்சைகளை தாண்டி..!! தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் தீவிர வாக்கு சேகரிப்பு..!!
இந்த நிலையில், இன்று விஜய் திருப்பூரில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை செய்கிறார். பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை இந்த பிரச்சார பயணம் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் விஜய் பரப்புரை செய்யும் நிலையில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார். முன்னாக வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் சுவர் மீது ஏறி விஜய் அனைவருக்கும் கைக்காட்டிச் சென்றார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இதையும் படிங்க: ஜி.கே.வாசன் தமாகாவை குறைந்த விலைக்கு மோடிக்கு விற்றுவிட்டார்... நாஞ்சில் சம்பத் விமர்சனம்...!