தமிழக வரலாற்றில் வீரம், தியாகம் மற்றும் சுதந்திர உணர்வின் அடையாளமாக திகழும் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ரத்தினசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த தீர்த்தகிரி என்பவரே பின்னாளில் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.
இன்று அவரது 271-வது பிறந்தநாள் விழாவாக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.தீரன் சின்னமலை தமிழகத்தின் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே மல்யுத்தம், வில்வித்தை, வாள்வித்தை, சிலம்பாட்டம் போன்ற போர் கலைகளில் சிறந்து விளங்கினார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய மாவீரர் அவர்.

இந்த ஆண்டு தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. கொங்கு வேளாளர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!
இந்த நிலையில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம் என விஜய் தெரிவித்து உள்ளார். அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..! விசில் கோலமிட்டு ஆதவ் அர்ஜுனாவை வரவேற்ற மக்கள்..!