கடந்த 21 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும் மத்திய அரசு கட்சியில் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் பேசி இருந்தார். இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று விஜய் பேசியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்தார்.
கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமானது என்றும் அது ஒருபோதும் மாறப்போவதில்லை எனவும் தெரிவித்தார். தென்னிந்தியாவில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதால் தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை அளிப்பார்கள் என்றும் பல விஷயங்களை கூறுவார்கள் எனவும் தெரிவித்தார். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுவதாகவும் கட்சித்தீவு பற்றி அவர்கள் பேசுவது முதல்முறை அல்ல என்றும் தெரிவித்தார்.

இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசி உள்ளார்கள் என்றும் தேர்தல் மேடைகளில் கூறுவதால் எதுவும் மாறப்போவதில்லை எனவும் தெரிவித்தார். கச்சத்தீவு குறித்து விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்ததாகவும் அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: முதல்வர் நாற்காலியில் விஜய்... தவெகவினரின் விநாயகர் சிலை வைரல்..!
இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை என்று தெரிவித்த அவர், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான் என்றும் இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம் எனவும் கூறினார். அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை என்றும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொண்டர்களை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்... நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்..!