வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

லாக்கப் மரணமடைந்த 24 பேர் குடும்பத்துக்கு கிட்ட சாரி கேட்காதது ஏன்? விஜய் சரமாரி கேள்வி..!

அஜித் குமாரை போல் காவல் மரணம் அடைந்த 24 பேரில் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு விசாரணைக்காக அழைத்துச் சொல்லப்பட்ட போது உயிரிழந்தார். அஜித் குமாரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அஜித் குமாருக்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன. இதேபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் காவல் மரணங்களால் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க கூறியும், வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக போராட்டக் களத்திற்கு வந்த விஜய், கருப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகை கைகளில் ஏந்தியபடி விஜய் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இதனை எடுத்துப் போராட்டத்தில் உரையாற்றிய விஜய், திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். அஜித் குமார் மரணத்திற்கு மன்னிப்பு கேட்ட முதல்வர், காவல் மரணங்களால் உயிரிழந்த 24 பேரில் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்காதது ஏன் என்றும் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய முதல்வர் இந்த 24 பேரில் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட போது இது தமிழ்நாடு காவல்துறைக்கு அவமானம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் தற்போது நீங்கள் உத்தரவிட்டதற்கு பெயர் என்ன சார் என்றும் கேட்டார். அன்று நீங்கள் சொன்னதும் இன்று நடப்பதும் சிபிஐ தானே என்று கேள்வி எழுப்பியுள்ள விஜய், எதற்காக இப்படி ஒளிந்து கொள்கிறீர்கள் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பு வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் மத்திய ஆட்சிக்குப் பின் ஒளிந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: முதன் முறையாக போராட்டக் களத்தில் விஜய்… கருப்பு நிற உடையில் பங்கேற்பு..!

இதையும் படிங்க: சீப்பை மறைத்தால் கல்யாணம் நிக்குமா.. தவெக தொண்டர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்! கடும் குற்றச்சாட்டு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी