தமிழக வெற்றிக் கழகத்திற்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் கிடைத்திருப்பது கட்சி தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்திருப்பது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இரண்டே ஆண்டுகளில் மக்களிடம் இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் தங்கள் தலைவர் விஜயின் 30 ஆண்டுகால உழைப்பின் வெற்றி என்று தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் தங்களின் முதல் தேர்தல் என்றும் விசில் என்பது விஜய் முன்னுரிமை கொடுத்த சின்னம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் வரவேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக தற்போது தங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதமாக எங்கு சென்றாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு என்ன சின்னம் என்று தான் மக்கள் கேட்பதாகவும் மக்களிடம் தமிழக வெற்றி கழகத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்றும் தங்கள் சின்னம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சத்தம் பத்தாது விசில் போடு...! பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் வழங்கி புஸ்ஸி ஆனந்த் குஷி..!
அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆசை இன்று நிறைவேறி இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இதை கொண்டாடும் வகையில் இருக்கிறது என்று கூறினார். விசில் சின்னம் என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமான சின்னம் என்று தெரிவித்தார். தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை தமிழக வெற்றி கழகத்தினர் செய்வார்கள் என்றும் அறிவிப்பு வெளியான 2,3 நிமிடங்களிலேயே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING : தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!