தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இது அவரது முதல் சட்டமன்றத் தேர்தல் அனுபவமாக அமையும். திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் விஜய் போட்டியிட, தி.மு.க. சார்பில் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. சார்பில் க. ராஜசேகரன் உள்ளிட்டோர் எதிர்கொள்கின்றனர்.
இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விஜய் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணன் வராரு..! விசில் அடிக்க ரெடியா..? திருச்சி கிழக்கில் விஜய் நாளை பிரச்சாரம்..!!
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளனர். விஜயின் வருகையால் திருச்சி மக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!