2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு அசாதாரண வெற்றியைப் பெற்றது. திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்து, முதல் முறையாகப் போட்டியிட்ட ஒரு கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு (118) 10 இடங்கள் குறைவான நிலையில், இந்த வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் விஜய் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வந்தார்.

தவெக தலைமையகமான சென்னை பனையூர் அலுவலகத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்புகள் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க கூடுதல் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகி இருக்கிறது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பலரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஆட்சி அமைக்கணும்..! எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை..! பனையூருக்கு புறப்பட்ட விஜய்..!!
ஆலோசனையின் முக்கிய நோக்கங்கள் பல. முதலில், சட்டமன்றக் கட்சித் தலைவராக விஜய்யைத் தேர்வு செய்வது, ஆளுநருக்கு அனுப்பும் கடிதம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய விவாதம்., இரண்டாவது, கூட்டணி வாய்ப்புகள் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட சிறு கட்சிகளின் ஆதரவைப் பெறுவது குறித்து ஆராய்வது உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. எந்த கட்சியை கூட்டணிக்கு அழைப்பது என்னென்ன அதிகாரங்கள் கொடுக்கலாம் மற்றும் அவர்கள் வைக்கும் டிமாண்ட் உள்ளடவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் விஜய்!! திருச்சி கிழக்குக்கு புதிய வேட்பாளர்! மீண்டும் தேர்தல்!!