இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் திட்டங்களை ஆய்வு செய்ய, உத்தரப் பிரதேச மாநிலத் திட்டக்குழு அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் சவாலாக உள்ள மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR) குறைக்க, தமிழகம் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைக் கண்டறிவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். தமிழகச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், பேறுகாலத்திற்கு முந்தைய திட்டமிடல், அவசரக்காலச் சிகிச்சை மற்றும் அரசு மருத்துவமனைகளின் நவீன உள்கட்டமைப்பு குறித்து அவர்கள் விரிவான தகவல்களைக் கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்வு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் தமிழகத்தின் #DravidianModel நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால், இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி! ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும். விருந்தினர்களை அன்போடு வரவேற்கிறேன்."
இதையும் படிங்க: "CHICKEN POX"..! வீரியமெடுக்கும் சின்னம்மை நோய்... சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!
தமிழகத்தின் MMR தற்போது 1 லட்சத்திற்கு 45.5 என்ற அளவில் உள்ளது. குறிப்பாகக் கோவை போன்ற மாவட்டங்களில் இது 34.2-ஆக மிகக் குறைவாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விகிதத்தைப் பத்துக்கும் (10) கீழ் கொண்டு வரத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ரூ.18,000 உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், 'இன்னுயிர் காப்போம்' மற்றும் கிராமப்புற மக்களுக்கான நடமாடும் மருத்துவக் குழுக்கள் போன்ற திட்டங்கள் தேசிய அளவில் முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசக் குழுவினரின் இந்த வருகை, தமிழகத்தின் சுகாதாரத் துறை மீதான தேசிய அளவிலான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!