ஈரான் உடனான போர் 6-வது நாளை எட்டியுள்ள சூழலில், அமெரிக்கா தனது அணுஆயுதத் திறனை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக மினிட்மேன் III (Minuteman III) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 'உலக அழிவு ஏவுகணை' (Doomsday Missile) என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 3 அன்று இரவு 11:01 மணிக்கு கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் (Vandenberg) விண்வெளிப்படைத் தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இது சுமார் 6,700 கிலோமீட்டர் தூரம் பயணித்து மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. இந்த ஏவுகணை சுமந்து செல்லும் அணுக்கரு முனையானது, 1945-ல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' (Little Boy) அணுகுண்டை விட சுமார் 20 மடங்கு அதிக சக்தி கொண்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மினிட்மேன் III ஏவுகணை ஒலியை விட 23 மடங்கு அதிக வேகத்தில் (Mach 23) செல்லக்கூடியது. அதாவது, மணிக்கு சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, உலகின் எந்தப் பகுதியையும் 30 நிமிடங்களுக்குள் தாக்கும் வல்லமை பெற்றது.
இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??
இந்தப் போர்ச் சூழலில் இந்தச் சோதனை நடத்தப்பட்டாலும், இது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒரு வழக்கமான சோதனைதான் (Routine Test) என்றும், உலக நிகழ்வுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காக இது நடத்தப்படவில்லை என்றும் அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் அலி கமேனி படுகொலை மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த விவகாரங்களால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், அமெரிக்காவின் இந்த ஏவுகணைச் சோதனை உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 100 வீரர்களுக்கு மேல் பலி!