மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கருப்பட்டி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இந்த நிலையில் பொது மக்கள் 12 பேர் கலந்து கொண்ட நிலையில் அதிகாரிகள் வருகை தராமல் அதிகாரிகள் 4 பேர் மட்டும் கலந்து கொண்டு பொது மக்களிடம் கலந்து ஆலோசனை கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் முடிந்ததாக அதிகாரிகள் கிளம்ப முயன்றனர்.
இதனை கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தவரே தீர்மான நோட்டை கேட்டபோது தரமறுத்த அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!
கிராம சபை கூட்டத்தில் 12 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டதாக அதிகாரிகள் முறைகேடு செய்ய முயன்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதவிகளிலும் இல்லாத, தவெக கட்சியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தனிநபராகக் குறிப்புகள் எழுதி தீர்மானப் புத்தகத்தைக் கையாண்டதாகவும், கையெழுத்துகள் பெறப்பட்டதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் யாருமின்றி, அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் நேரடியாகக் கிராம சபை பதிவேடுகளைக் கையாண்டு தீர்மானங்களை எழுதியுள்ள செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானங்களின் சட்டப்பூர்வத் தன்மை குறித்துப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
எனவே, பொறுப்பில்லாத நபர் ஒருவர் எவ்வாறு அரசு ஆவணங்களைக் கையாளலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் அனைவரின் பங்கேற்புடன் விதிமுறைகளின்படி மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?