மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கமல்ல என்று கூறினார். எங்கிருந்தாலும் MLA-க்கள் செல்வன், ராஜேந்திரன் வாழ்க என்றார். அவர்கள் என் முதுகில் குத்தவில்லை., என் நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்தார்.
உயிரை கொடுக்கும் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள்தான் கட்சியை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கையுடன் பேசினார். மேலும், தமிழகத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என வைகோ அறிவித்தார். திமுக ஆட்சியில் ஊழல் கொடி கட்டி பறந்தது என்றார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக எங்களை பிளாக்மெயில் செய்தது என்று வைகோ பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கூட்டணியில் இருக்கும் போது இது பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள் என்றும் அப்போது பேசி இருந்தால் தங்களை மறுநாளை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்
இதையும் படிங்க: குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!
வேறு ஒரு கூட்டணிக்கு சென்றாலும் அதையும் விமர்சித்து இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இரண்டு எம்எல்ஏக்கள் பதவி விலகினால் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் விஜய் பேசியதாக வைகோ கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தி வந்த நிலையில், முதல்வர் விஜய் பரிசீலிப்பதாக தெரிவித்ததை சுட்டிக்காட்டி வைகோ விளக்கம் கொடுத்திருக்கிறார். திமுக தங்களை கூட்டணியில் மோசமாக நடத்தியதாக வேதனையை வெளிப்படுத்தி உள்ள வைகோ, சகித்துக் கொண்டுதான் இருந்தோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை! தவெக கூட்டணி வெற்றிக்கு முழு மூச்சாக உழைப்போம்!! வைகோ விளக்கம்!