தமிழ்நாடு அரசியலில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.என்.பி. வெங்கட்ராமன் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பு சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. வெங்கட்ராமன் ஆலந்தூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த நிகழ்வின்போது மூத்த திமுக தலைவர்களான க. பொன்முடி, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். எலங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வெங்கட்ராமன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து திமுகவில் புதிய பொறுப்பேற்றார்.

இந்த இணைப்பு அதிமுகவில் தற்போது நிலவும் உள் முரண்பாடுகளின் பின்னணியில் நடைபெற்றுள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்கள் இருப்பதாகக் கூறப்படும் சூழலில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி போன்றோர் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தினாலும், பல முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திமுக அல்லது பிற கட்சிகளை நோக்கி நகர்வது அதிமுகவுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: “தவெகவில் இணையப்போறீங்களா?”... சி.விஜயபாஸ்கர் ஒரே வார்த்தையில் ரிப்ளை..!!
வெங்கட்ராமனின் இணைப்பு திமுகவுக்கு ஒரு வலுவான சேர்க்கையாகப் பார்க்கப்படுகிறது. அலந்தூர் தொகுதி சென்னை பகுதியில் உள்ள முக்கிய தொகுதியாகும். இந்த இணைப்பு மூலம் திமுக தனது அடித்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 2014 ம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திக்... திக்... திருப்பம்...!! - எகிறி அடித்த இபிஎஸ் Vs விட்டுக்கொடுக்காத சிவிஎஸ்... அதிமுகவில் நடப்பது என்ன?