சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் பயணம் 1876ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வேளாண் பள்ளியாகத் தொடங்கியது. இந்தப் பள்ளி கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் துறைகளில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. 1903ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, வேப்பேரியில் உள்ள டோபின் ஹால் எனும் சிறிய கட்டிடத்தில் இது முறையாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியாக உருவெடுத்தது.
அப்போது, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பட்டதாரி என்ற மூன்றாண்டு டிப்ளமோ படிப்பு ஆண்டுக்கு 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு இந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, இந்தியாவில் கால்நடை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் வழங்கிய முதல் கல்லூரியாகப் புகழ்பெற்றது.1989ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது.

இதன் தலைமையிடம் சென்னையின் மாதவரம் பால் காலனியில் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதன்மையான உறுப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமாகவும் அறியப்படுகிறது.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது..!
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் அளித்துஎழுந்தது. இந்த முறைகேடுகள் குறித்த விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு புகாரில் சிக்கிய ஐந்து அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் உட்பட இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய முதல்வராக சதீஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேல்மலையனூரில் நிகழ்ந்த கொடூரம்…வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமை!