தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறந்த விவகாரம் தொடர்பாக பேசினார். தொண்டர்கள் ஆர்வமிகுதியால் இது போன்ற செயல்களை ஈடுபடுவதாகவும், முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரள போவதாக உறுதிப்படுத்த தெரிவித்தார்.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது குறித்து பேசிய அவர், விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் விஜயின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பினார். இதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றும் அதற்காக தான் அவர் பாதுகாப்பு கேட்டு இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும், மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நயினார் நாகேந்திரன் முன் வைத்தார்.
இதையும் படிங்க: அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!
ஆசிரியர் காலிப் பணியிடங்களை திமுக அரசு நிரப்பவில்லை என்று கூறிய அவர், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். 2026 தேர்தலில் விடியாத அரசு மக்களிடம் தகுந்த பதிலை பெறும் என்றும் சாடினார்.
இதையும் படிங்க: அச்சச்சோ...! ரஜினி ரூட்டை பாலோப் பண்ண பார்க்கும் விஜய்... எடப்பாடி, அமித் ஷா தலையில் இறங்கியது இடி...!