வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்… வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக கடந்த மாதம் சசிகலா பொறுப்பேற்ற நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

27 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ள உள்ளதாக விஜய் மீது சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தனது மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதுவே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது அவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். 

விவாகரத்து வழக்கு முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிலேயே தான் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனச் சங்கீதா இடைக்கால மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய்யின் தரப்பில் இதற்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்…” – பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்… கோவையில் பரபரப்பு பேட்டி…!

விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரித்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் கடந்த இருபதாம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நடத்திய நீதிபதி விவாகரத்து வழக்கில் ஜூன் 15ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் விஜயின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இவரது பணியிட மாற்றத்திற்கான முழு காரணம் இன்னும் தெரிய வரவில்லை, குடும்ப நல நீதிபதியாக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நீதிபதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சுஜாதா மீண்டும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

இதையும் படிங்க: தவெகவுக்கு இத்தனை தொகுதியா? – யாரும் எதிர்பார்க்காத கருத்துக்கணிப்பு… வாயை பிளந்த திமுக, அதிமுக…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी