தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சற்று நேரத்திற்கு முன்னால் பதவியேற்பு விழா நடைபெறும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்து சேர்ந்தார்.
பதவியேற்பு விழா காலை 10:00 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே (காலை 9:00 மணியளவில்) விஜய் அரங்கிற்கு வந்து சேர்ந்தார். எப்போதும் எளிமையை விரும்பும் விஜய், இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தில் தனது அடையாளமான கருப்பு நிறப் பேண்ட் மற்றும் வெள்ளை நிறச் சட்டை அணிந்து மிக எளிமையாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் வந்து இறங்கினார். விழா தொடங்குவதற்கு முன்பே வந்து, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வருகை குறித்து அவர் கேட்டறிந்தார்.

விஜய்யின் கார் அரங்கிற்குள் நுழைந்ததும், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஜோசப் விஜய் எனும் நான்... என இப்போதே முழக்கமிட்டு அரங்கையே அதிரச் செய்தனர். தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!
இன்னும் சில நிமிடங்களில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் சிறப்பு விருந்தினர் ராகுல் காந்தி ஆகியோர் அரங்கிற்கு வரவுள்ளனர். அதைத் தொடர்ந்து, 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு மாற்று சக்தியாக விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் ஏற்க உள்ளார்.
இதையும் படிங்க: இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்! நேரு விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு பிரம்மாண்ட விழா!