காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு பேசினார்.
அனைவருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கான வசதி வாய்ப்பை உருவாக்க பொருளாதார வளர்ச்சியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருப்பவரும் குறைந்தபட்சம் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தவாறு கல்வியில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அரசு மருத்துவமனைக்கு அச்சமில்லாமல் மக்கள் செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும். பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் ஊரும், மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருக்க… அதற்கு நான்காயிரம் கோடி திட்டம் என்று உருட்டினார்களே., அந்த மாதிரி இல்லாமல் உண்மையான ஒரு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். மீனவர்களோடு, தொழிலாளர்களோடு, நெசவாளர்களோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கேட்டு அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும். அதனை செயல்படுத்தவும் வேண்டும். தொழிற்சாலை வளர்ச்சிகளை நம் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை கைப்பிடியில் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பெண்கள் என அனைவருக்கும் பாதுகாப்பை உருவாக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பெண்ணுக்கு நடந்த பிரச்சனை போலவோ அல்லது கோயம்புத்தூரில் நடந்த கல்லூரி பெண்ணுக்கு நடந்த பிரச்சனை போன்றோ நடக்காமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: #BREAKING: பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? காஞ்சிபுரத்தில் விஜய் தெறி பேச்சு…!
இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையில் தெளிவாக கொடுப்போம் என்றும் கூறினார். மற்றவர்களை போல சும்மா அடித்து விட்டு பேசுவது போல நம்மிடம் கிடையாது என்றும் தெரிவித்தார். நாங்கள் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே என்று கூறினார். கொள்கை எதிரியிலோ அல்லது அரசியல் எதிரியிலோ எந்த குழப்பமும் கிடையாது என்றும் தெரிவித்தார். இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டேன் என்றும் சொன்னால் செய்யாமல் விடமாட்டேன் என்றும் உங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் வரேன்..! நீலாங்கரையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு பறந்த விஜய்... புதுப்பொலிவுடன் மீண்டும் மக்கள் சந்திப்பு...!