திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடையாறு C.L.R.I.க்கு ப்ராஜெக்ட் தொடர்பாக மாணவி ஒருவர் சென்றுள்ளார். தற்போது அந்த மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் நிகழ்ந்துள்ள அடுத்த பாலியல் வன்கொடுமை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியிலிருந்து ப்ராஜெக்டுக்காக சென்னை வந்திருந்த மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. காரில் கடத்திச் சென்று மூன்று பேர் தன்னை மிரட்டியதாக அபிராமிபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பின் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள புகாரை பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி. செல்வம் சுட்டிக்காட்டினார். மாணவியின் செல்போனுக்கு மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை அனுப்பி ஒரு கும்பல் மிரட்டியதோடு, மாணவியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்று அந்த கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!
தொடர்ச்சியாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் பற்றி முதல்வர் கவனத்தில் கொண்டுள்ளாரா என்றும் தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றவாளிகள், போதையால் குற்றம் செய்பவர்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாக சுற்றித்திரிவது எவ்வளவு ஆபத்தானது என ஆளும் அரசும் காவல்துறையும் உணர்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
ஈரானுக்கு குரல் கொடுக்கும் திருமாவளவன்,சிலிண்டருக்கு மாலை போட்டு போராட்டம் செய்யும் காங்கிரஸ் கட்சியினர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு கடிதம் எழுதும் கமல்ஹாசன் ,பெண்ணியம் பேசும் கனிமொழி அனைவரும் இப்போது மௌன விரதம் இருக்காமல் ஆட்சியில் மீதமிருக்கும் சில நாள்களிலாவது பெண்கள் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயலுங்கள் என காட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் வீட்டிலிருந்து பத்து நிமிஷம் தான்..!! காரில் கடத்தி மாணவி வன்கொடுமை... கொந்தளித்த அண்ணாமலை..!!