வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அம்பலமாகும் வாக்கு திருட்டு! செப்.7ல் மாநில மாநாடு… அணி திரள செல்வப்பெருந்தகை அழைப்பு..!

வாக்குத்திருட்டை அம்பலப்படுத்தும் விதமாக செப்டம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியில் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக செல்வப் பெருந்தகை அறிவித்தார்.

இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. 

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு 100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இருப்பினும் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மாறாக ராகுல் காந்தி ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியது. இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பாக அம்பலப்படுத்தும் வகையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

திருநெல்வேலியில் தனது தலைமையில் நடைபெறும் இந்த மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டுமென வலியுறுத்தினார். பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயணம் இந்தியாவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டிக்கின்ற வகையில் நிறைவு பெற்றிருக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இதுதான் காங்கிரஸ் கட்சி மாண்பா? ஒழுங்கா பிரதமர் கிட்ட மன்னிப்பு கேளுங்க… நயினார் வலியுறுத்தல்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी