மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி அளவில் வலுவிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறிய வானிலை மையம், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்து உள்ளது. இதனிடையே, சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2 வாரம் ரெஸ்ட்... அப்புறம்தான் ஆட்டமே இருக்கு...! வானிலை மையம் எச்சரிக்கை..!
இரவு 7 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
இதையும் படிங்க: பகீர் வானிலை அலர்ட்… இன்று மாலையே உருவாகிறது மோன்தா புயல்… எச்சரிக்கை…!