×
 

சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ஆர்சிபி அணியின் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி 75 ரன்களுக்குச் சுருண்டது.

ஐபிஎல் 2026 சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி வெறும் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது. ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் வேகத்தில் டெல்லி பேட்டர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆர்சிபி அணியின் புதிய பந்துவீச்சு கூட்டணியான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வேட்டையாடினர். குறிப்பாக, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டெல்லி அணி 8 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த சமயத்தில் டெல்லி அணி, ஐபிஎல் வரலாற்றின் மிகக்குறைந்த ஸ்கோரான 49 ரன்களுக்குள் சுருண்டுவிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், அந்த மோசமான சாதனையை எட்டாமல் டெல்லி அணி 75 ரன்களைத் தொட்டது. ஒருபுறம் டெல்லி படுதோல்வியைச் சந்தித்தாலும், ஆர்சிபி ரசிகர்கள் ஒருவித ஏமாற்றத்தில் உள்ளனர். "8 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்த போதே டெல்லியை 49 ரன்களுக்குள் முடித்திருக்கலாம், அந்த ஒரு மோசமான சாதனை (49 ரன்கள் - ஆர்சிபி vs கேகேஆர், 2017) இன்னும் எங்கள் அணியின் பெயரிலேயே நீடிக்கிறது" எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட்டின் துல்லியமான ஸ்விங் பந்துவீச்சு ஆர்சிபி அணிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இந்த சீசனில் உருவெடுத்துள்ளது.

 

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் புதிய சாதனை!! அதிவேக 5000 ரன்கள்! 5 சதம், 26 அரை சதங்களுடன் பட்டியலில் இணைந்தார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share