×
 

#BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

அகமதாபாத்தில் ​​​​​​​நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாகசாம்பியன் பட்டம் வென்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026-ன் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையைத்  முதல் அணி என்ற உலகச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் (45 பந்துகளில் 89 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (21 பந்துகளில் 52 ரன்கள்) ஆகியோர் வழங்கிய அதிரடித் தொடக்கம் இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. இஷான் கிஷன் (25 பந்துகளில் 54 ரன்கள்) தனது பங்கிற்கு அரைசதம் கடந்து அசத்தினார்.

256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஜஸ்பிரித் பும்ரா 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார். நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

2007 மற்றும் 2024-ல் கோப்பையை வென்றிருந்த இந்தியா, தற்போது 2026-லும் வாகை சூடி 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையைச் சொந்த மண்ணில் வென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா இன்று அகமதாபாத்தில் தட்டிச் சென்றது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதே மைதானத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு, இன்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிகச்சிறந்த வெற்றியைப் பரிசாக அளித்து ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.


 

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share