×
 

சிறப்பான ஆட்டத்தால் RCB-ஐ சுருட்டிய SRH... 42 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 34 ரன்களும் டிராவிஸ் ஹெட் 10 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் ஹென்ரிச் கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்களும், அனிகேட் வர்மா 9 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்த நிலையில், இஷான் கிஷன் தொடர்ந்து அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: படிக்கலுக்கு பதில் வேறொரு வீரர் அணியில் சேர்ப்பு... ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் முக்கிய தகவல்!!

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பில்சால்ட் சிறப்பாக ஆடி 32 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரொமாரியோ ஷெப்பர்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

வரிசையாக விக்கெட் விழுந்ததால் ஆர்.சி.பி அணி ரன்களை குவிக்க தடுமாறியது. அப்போது வந்த அணியின் கேப்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share