×
 

ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் நிறுவனத்தை 1.63 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்குக் மிகப்பெரிய தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பத் தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான கூட்டமைப்பு, இந்த அணியை 1.63 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13,600 கோடி) வாங்கியுள்ளது.

கல் சோமானி தலைமையிலான இந்தக் கூட்டமைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 100 சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரின் மிக விலையுயர்ந்த அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் உருவெடுத்துள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான 'வால்மார்ட்' (Walmart) வாரிசு ரோப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல் (NFL) டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர் ஷீலா ஃபோர்டு ஹாம்ப் (ஃபோர்டு மோட்டார் குடும்பம்) ஆகியோர் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

இந்த விற்பனை ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டாலும், தற்போதைய உரிமையாளர் மனோஜ் படாலே தலைமையிலான நிர்வாகமே ஐபிஎல் 2026 சீசன் முடியும் வரை அணியை வழிநடத்தும். கல் சோமானி தரப்பு 2026 சீசனுக்குப் பிறகு முறைப்படி பொறுப்பேற்கும்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த கல் சோமானி, ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பத் தொழிலதிபர். இவர் IntraEdge, Truyo.Ai மற்றும் Academian போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறுபான்மை முதலீட்டாளராக இருந்த இவர், தற்போது ஒட்டுமொத்த அணியையும் தனது வசமாக்கியுள்ளார்.

இந்த மெகா டீல் மூலம் ஐபிஎல் தொடரின் பிராண்ட் மதிப்பு உலக அளவில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2008-இல் முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், புதிய உரிமையாளர்களின் கீழ் இன்னும் வலுவான அணியாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share