• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நாளை பூமிக்கு திரும்புகிறார்கள்.. நாசா அறிவிப்பு..!

    சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாளை மாலை பூமிக்கு திரும்புகிறார்கள் என நாசா அறிவித்துள்ளது.
    Author By Pothyraj Mon, 17 Mar 2025 11:36:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sunita-williams-returns-tomorrow-nasa-announced

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் 9 மாதங்களுக்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாளை (மார்ச்18) மாலை பூமிக்கு திரும்புகிறார்கள் என நாசா அறிவித்துள்ளது.

    earth

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சில ஆய்வுக்கு சுனிதா, வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றனர். 8 நாட்களில் பணியை முடித்து பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், இவர்கள் சென்ற விண்கலம் பழுதாகி அதிலிருந்த ஹீலியம் வாயு முழுவதும் வெளியேறியது. இதனால் இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலேயே சிக்கினர்.

    இதையும் படிங்க: தேவதையான எலான் மஸ்க்கின் டிராகன் காப்ஸ்யூல்... சுனிதா எப்படி பாதுகாப்பாக தரையிறங்குவார்..?

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், டிராகன் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் புதன்கிழமையே ராக்கெட்டை ஃபுளோரிடாவில் உள்ள கேப்கெனரவல் விண்வெளி தளத்திலிருந்து ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது.

    earth

    ஆனால், கவுண்ட்வுன் முடிய 45 நிமிடங்கள் இருக்கையில் ராக்கெட்டில் இருக்கும் ஹெட்ராலிக் சரியாகச் செயல்படவில்லை என்பதால் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த பழுதை சரி செய்தபின், சனிக்கிழமை அதிகாலை டிராகன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் பூமிக்கு அனுப்பி வைத்து, இவர்கள் 4 பேரும் அங்கு பணியாற்றுவார்கள்.  

    earth

    இதன்படி டிராகன் ராக்கெட் திட்டமிட்டபடி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது, விண்வெளி வீரர்களும், சுனிதா வில்லியம்ஸ், வில்மோரைச் சந்தித்தனர். இவர்கள் மார்ச் 18ம் தேதி மாலை பூமிக்கு ராக்கெட் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.

    இது குறித்து நாசா வெளியிட்ட அறிவிப்பில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் அழைத்துக் கொண்டு அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவரும் டிராகன் ராக்கெட் மூலம் மார்ச் 18ம் தேதி மாலை பூமிக்கு திரும்புவார்கள். இந்த டிராகன் ராக்கெட் 18ம் தேதி மாலை 5.57 மணிக்கு பூமியை வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

    earth

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பணிகள் அனைத்தையும் புதிதாகச் சென்றுள்ள விண்வெளி வீரர்களிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். அதன் பின்புதான் பூமிக்கு சுனிதா, வில்மோர் புறப்படுவார்கள். இந்த வார இறுதியில் காலநிலை எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லாததால் விரைவாக பூமிக்கு திரும்புவார்கள். டிராகன் கேப்சுலில் நாசா விஞ்ஞானிகள் நிக் ஹாக், ரஷ்யாவின் அலெக்சான்ட்ரா கோர்பனோவ் ஆகியோரும் சுனிதா, வில்மோருடன் பூமிக்கு திரும்புவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    நாசா விஞ்ஞானி பிராங் ரூபியா அதிகபட்சமாக நாசாவில் 371 நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் மிர் விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவின் வலேரி போல்யாக் தொடர்ந்து 437 நாட்கள் தங்கியிருத்தது சாதனையாக இருந்து வருகிறது.

    இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் என்ன சிக்கல், ஏன் தாமதம்..? புற்றுநோய் வருமா..?

    மேலும் படிங்க
    மும்பையை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி! பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த KKR!

    மும்பையை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி! பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த KKR!

    கிரிக்கெட்
    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு
    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share