ரூ.10,000 விலையில் சோனி IER ஹெட்போன்.. வாங்கத் தூண்டும் அம்சங்கள் என்னென்ன?
இந்த இயர்போன் மொத்தத்தில் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய வயர்டு இன்-இயர் மாணிட்டர் ஹெட்போன் மாடலான IER-M500-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்முறை ஆடியோ மாணிட்டரிங், லைவ் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்டேஜ் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாடல், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட பின்னர் இப்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இசைக்கலைஞர்கள், மானிட்டர் இன்ஜினியர்கள் மற்றும் ஆடியோ ஆர்வலர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இது, உயர்தர ஒலி மற்றும் வலுவான சத்த தனிமைப்படுத்தலை வழங்குகிறது. 5mm டைனமிக் டிரைவருடன் வரும் இந்த இயர்போன்கள், சீல்டு அகௌஸ்டிக் ஹவுசிங் மற்றும் உள் அகௌஸ்டிக் ஸ்ட்ரக்சரை கொண்டுள்ளன. இதனால் வெளிப்புற சத்தம் குறைக்கப்பட்டு, பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் அனுபவம் கிடைக்கிறது.
ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுடன் 10Hz முதல் 40,000Hz வரை அதிர்வெண் வரம்பு உள்ளது. உணர்திறன் 103dB/mW மற்றும் 1kHz-ல் இம்பிடன்ஸ் 16 ஓம் ஆகும். குறைந்த மற்றும் உயர் அதிர்வெண்களை தெளிவாக மீட்டெடுக்கும் வகையில் அகௌஸ்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில்முறை மானிட்டர் இன்ஜினியர்களின் உள்ளீட்டுடன் உருவாக்கப்பட்டதால், ஸ்டேஜ் சூழலில் நிலையான மாணிட்டரிங் கிடைக்கும்.
இதையும் படிங்க: டேட்டா பிரியர்களுக்கு குட் நியூஸ்! வெறும் ரூ.39-க்கு 20ஜிபி..!! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை!
பொருத்தத்தை உறுதிப்படுத்த பல்வேறு அளவுகளில் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள், ஃபிட்டிங் சப்போர்ட்டர்கள் (பல அளவுகள்), அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கேபிள் க்ளிப் மற்றும் கேரிங் கேஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. 1.6 மீட்டர் நீளமுள்ள Y-டைப் வயர்டு கேபிளுடன் L-வடிவ ஸ்டீரியோ மினி பிளக் உள்ளது. கேபிள் நீங்கலாக எடை சுமார் 6.9 கிராம் மட்டுமே. கேபிள்கள் மீண்டும் மீண்டும் வளைவதற்கு உகந்ததாகவும், ஸ்டேஜ் பயன்பாட்டுக்கு நீடித்த தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விலை ரூ.10,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக், க்ளியர் மற்றும் ரெட் அண்ட் ப்ளூ (ரெட்-ப்ளூ) ஆகிய மூன்று நிற விருப்பங்களில் கிடைக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், ரியல் இமேஜ், சவுண்ட் க்ளிட்ஸ், ஹெட்போன் ஜோன் மற்றும் பிற ஆஃப்லைன் தொழில்முறை ஆடியோ ஸ்டோர்களில் விற்பனைக்கு உள்ளது.
ஆகஸ்ட் 24, 2026 முதல் கிடைக்கத் தொடங்கியுள்ளது. லைவ் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பான பொருத்தம், தெளிவான ஒலி மற்றும் சத்தத் தடை ஆகியவற்றை வழங்கும் இந்த மாடல், தொழில்முறை பயனர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.