தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நீண்ட வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா பாட்டியா. இப்படிப்பட்ட தமன்னா சினிமாவில் ஹீரோயினாக தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் தோன்றுவதைவிட, சமீப காலமாக படங்களில் அவர் முக்கியமாக கவர்ச்சியான நடனங்களில் மட்டும் பங்கேற்று, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக பாகல் ஹாபி, காதலிக்க வேண்டாம், காளி பிலா போன்ற இவரது நடனத்தில் வெளியான பாடல்கள் யூடியூபில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து, தமன்னா வெப் சீரிஸ்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். புதிய தலைமுறை பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில், வெப் சீரிஸ்கல் மற்றும் நடனங்கள், கவர்ச்சி என பல முயற்சிகளை செய்து வருகிறார்.
இது அவருடைய முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய அடையாளமாக மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட தமன்னா, தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருந்த தகவல் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்க, இவர்கள் இருவரும் பொது வெளியில் ஒன்றாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்தும் இணையத்தில் பரவி வைரலாகின. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரது காதலில் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் இப்போது தங்கள் வாழ்க்கையில் தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும், அதனுடன் தனது மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலான எழுத்துக்களையும் மனதுருகும் வகையில் எழுதி பதிவிட்டு இருக்கிறார்.

அந்த பதிவு, "இது தான் ‘புரிந்து கொள்வது’ என்பதற்கான கட்டம். நீங்கள் பாதி வடிவமைப்பாளர், பாதி விசாரணையாளர் போல இருப்பது போன்றது. ஒவ்வொரு சிறு விவரமும் முக்கியம். ஒவ்வொரு தவறும் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத் தரும். ஐடியாக்கள் ஸ்டிக்கி நோட்டுகளில் வாழும் கட்டம் தான் இது. இது இன்னும் முழுமையடைந்திருக்கவில்லை. ஆனாலும் அது உருவாகிக் கொண்டு இருக்கிறது. நிச்சயமாக அதுதான் மாயாஜாலம். ஒவ்வொரு மின்னும் விஷயத்துக்குப் பின்னிலும், ஒரு மின்னாத செயல்முறை இருக்கிறது. முடிவுகள், சந்தேகங்கள்—அதெல்லாம் இதன் ஒரு பகுதிதான். புத்திசாலித்தனம், குழப்பம், ஒரே நேரத்தில் பரபரப்பு நிறைந்த அந்த நடுக்கட்டம் இதுதான்." என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நீல நிற அழகிய சுடிதாரில் நடிகை பிரியா வாரியர்...! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
இந்த பதிவின் மூலம் நடிகை தமன்னா தற்போது தனது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
"தமன்னா இன்ஸ்ட்டா பதிவை கிளிக் செய்து பார்க்கலாம்"
மேலும், கடந்த கால சம்பவங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு, அதை ஒரு சக்தியாக மாற்ற முயற்சி செய்கிறார். இது ரசிகர்களுக்கும், சினிமா உலகத்திற்கும் ஒரு முக்கியமான செய்தியாக அமைந்திருக்கிறது. வாழ்க்கையின் சிக்கல்களை சரியாக நிர்வகிக்க, சுயபரிசோதனை செய்து, புத்துணர்ச்சியுடன் மீண்டும் எழுந்து நிற்கும் தமன்னாவின் மனநிலை இந்த பதிவின் மூலமாக பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. தமன்னா ஒரு கவர்ச்சிப் பாடலுக்காக மட்டுமே பார்ப்பதைக் கடந்துவிட்டு, ஒரு நடிகையாகவும், படைப்பாளியாகவும் தன்னை வெளிப்படுத்த பல முயற்சி செய்கிறார்.

தற்போது நடிகை தமன்னா குறித்த எந்தவித பெரிய திரைப்பட அறிவிப்புகளும் இல்லாத நிலையில், தமன்னா தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள உணர்ச்சிப் பதிவுகள், அவரது வாழ்க்கையின் எளிமையான, முக்கியமான கட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: பட்டு சேலையில் அழகிய சிரிப்புடன் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!