நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தகதகவென மின்னும் புடவையில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

‘லவ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் பேசப்படும் ஐஸ்வர்யா லட்சுமி, படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் காதல் குறித்து பகிர்ந்துகொண்ட கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தன.
இதையும் படிங்க: சிம்புவுக்கும் வெற்றிமாறனுக்கும் சண்டை..!! ‘அரசன்’ படத்தின் நிலைமை என்ன.. குழப்பத்தில் ரசிகர்கள்...!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அழகான தோற்றம் மட்டுமின்றி, கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தும் திறமையாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர், திரைப்படங்கள் மட்டுமின்றி தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தகதகவென மின்னும் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

பாரம்பரிய உடையில் அழகாகக் காட்சியளிக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள், அவருடைய ஸ்டைலையும் அழகையும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தி தெரியாது போடா..!! ஜவான் படம் உருவானதே தமிழ்ல தான்.. இயக்குநர் அட்லீ பகிர் பேட்டி..!