தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்புத்திறமையும், எளிமையான தன்மையையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ரித்விகா. இப்படிப்பட்டவர் தனது சினிமா பயணத்தை 'பரதேசி' படத்தின் மூலம் துவக்கினார். வலிமையான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்பும் ரித்விகா, 'மெட்ராஸ்', 'கபாலி', 'ஒரு நாள் கூத்து', 'டார்ச் லைட்' உள்ளிட்ட படங்களில் சிறப்பான குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர். இருப்பினும் அவர் மக்கள் மத்தியில் அதிகம் ஃபேமஸ் ஆக காரணம், விஜய் டீவியின் 'பிக் பாஸ் சீசன் 2' மூலம் தான். சமூகத்திற்கு முன்வைக்கும் கருத்துகள், நேர்மையான செயல்கள் மற்றும் தைரியம் ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் இந்த நிகழ்ச்சி மூலம் நீங்கா இடம்பிடித்தார்.
இறுதியில், அந்த சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தான், அவரின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. இப்போது அவருடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்குத் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவருக்கு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நடிகை ரித்விகா, தனது நீண்ட நாள் நண்பரான வினோத் லக்ஷ்மணன் என்பவரை தற்பொழுது காதல் திருமணம் செய்ய தயாராகியுள்ளார்.
இப்படி இருக்க தங்களது காதல் திருமணத்திற்கு அடையாளமாக இருவரும் நிச்சயதார்த்த மோதிரங்களை பரிமாறிக்கொண்டு, தங்களது உறவை அதிகாரபூர்வமாக மக்களுக்கு அறிவித்துள்ளனர். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரித்விகா, “நாங்கள் எங்கள் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறோம்… உங்கள் ஆசீர்வாதங்களைத் எங்களுக்குத் தாருங்கள்” என்ற பதிவுடன், வினோத்துடன் எடுத்துக்கொண்ட சிறப்பான நிச்சயதார்த்த புகைப்படங்களை அழகாக பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களில், இருவரது நெருக்கம், பாசம், அடுத்து தனது வாழ்க்கையின் மீதான நம்பிக்கை ஆகியவை வெளிப்படும் வகையில் உள்ளன. இந்த சூழலில், இருவரும் வாழ்த்து மழையில் தற்பொழுது நனைந்து வருகின்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் சிலர், “அக்கா உங்களுக்கு வாழ்த்துகள்!”, “எப்போ கல்யாணம்?”, “நீங்கதான் நிஜமாவே காதலிக்கிறீங்க போல”, எனப் பல்வேறு விதமான வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்க நடிகை ரித்விகா திருமணம் செய்யவுள்ள வினோத் லக்ஷ்மணன் யார்? என பார்த்தால், வினோத் லக்ஷ்மணன் தமிழ் சினிமா மற்றும் மீடியா துறையுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. சிலர் அவரை விளம்பரத் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ரித்விகாவுடன் வினோதின் உறவு கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் நிலைத்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: 'விடாமுயற்சி' பாடல் இசையில் உருவான 'மோனிகா' பாடல்...! இரண்டுமே ஒண்ணுதான்.. மீண்டும் அனிரூத் மீது காப்பி சர்ச்சை..!
இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளும் இருவரது நட்பு எப்போது காதலாக மாறியது என்பதை உணர்த்துகின்றன. தற்பொழுது இருவரின் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், இருவரின் திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிக் பாஸ் மற்றும் சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்கள் ரித்விகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். பிக் பாஸ் சீசன் 2-ல் இணைந்த தோழிகள் யாஷிகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவுகளை கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகும், சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான திட்டங்களை ரித்விகா வைத்திருக்கிறார்.
தற்போது இரண்டு வித்தியாசமான கதைகள் உள்ளடங்கிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரித்விகா. அதோடு, ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். எனவே, ரித்விகா மற்றும் வினோத் லக்ஷ்மணன் ஆகியோரது நிச்சயதார்த்தம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் சாதித்து வருபவரும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தைரியமாக முடிவெடுக்கக் கூடியவருமான ரித்விகா, இப்போது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கியுள்ளார்.

அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், உறவுப் பிணைப்புடனும் நிறைந்திருக்க ரசிகர்கள் மற்றும் திரையுலகம் சார்ந்தவர்கள் அனைவரும் மனமார வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த நடிகை சரோஜா தேவி..! சரித்திரத்தில் இடம்பிடித்த சாதனை பெண்ணின் வாழ்க்கை வரலாறு..!