• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கல்வியின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் உணர்வுபூர்வமான படம் தான் அருள்வான்..!! வெற்றிவாகை சூடினாரா அருள்நிதி.. விமர்சனம் இதோ..!

    'அருள்வான்' திரைப்படம் கல்வியின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் உணர்வுபூர்வமான படமாக உள்ளது.
    Author By Bala Sat, 18 Jul 2026 10:19:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-arulvan-movie-review-tamilcinema

    தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்கள் வருவது புதிதல்ல. ஆனால், ஒரு நல்ல கருத்தை போதனை போல இல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைத்து, உணர்வுபூர்வமாக சொல்லும் படங்களே ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிற்கும். அந்த வரிசையில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'அருள்வான்' திரைப்படம் கல்வியின் அவசியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

    மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் அறியாமை, கல்வியின் சக்தி மற்றும் ஒரு அரசு அதிகாரி நினைத்தால் சமூகத்தில் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையே இந்த படம் பேசுகிறது. அந்த முயற்சியில் இயக்குநர் வெற்றி பெற்றாரா என்பதை பார்க்கலாம். அடர்ந்த மலைப்பகுதியில், நாகரிக உலகத்திலிருந்து வெகுதூரம் விலகி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களுக்கு கல்வி என்றால் என்ன என்பதே தெரியாது.

    எழுதவும் படிக்கவும் தெரியாமல், காட்டில் கிடைக்கும் வளங்களை நம்பியே மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அந்தக் கூட்டத்தில் வாழும் தம்பதியரான ஆரவ் மற்றும் ரம்யா பாண்டியனின் மகள் குறிஞ்சிக்கு மட்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. ஆனால், அந்த ஆசையை நிறைவேற்றும் சூழல் அங்கு இல்லை. 

    இதையும் படிங்க: உண்மையிலேயே தீபிகா படுகோனே சூப்பர்..!! கர்ப்பத்தின் இறுதி கட்டத்திலும் ‘ராக்கா’ படத்திற்காக எடுத்த ரிஸ்க்..!

    arulvan-movie-review

    இதற்கிடையில், அந்தப் பகுதியை அபகரிக்க முயலும் வனத்துறை அதிகாரி ஜான் விஜய், குறிஞ்சியின் தாத்தாவை ஏமாற்றுகிறார். உண்மை தெரியவரும் போது குற்ற உணர்ச்சியில் தாத்தா உயிரிழக்கிறார். இந்த சம்பவம் குறிஞ்சியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைகிறது. "எப்படியாவது படித்து பெரிய ஆளாக வேண்டும்" என்ற உறுதியுடன் அவள் பயணத்தை தொடங்குகிறாள். அதே நேரத்தில் அந்த மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக அருள்நிதி பொறுப்பேற்கிறார். குறிஞ்சியின் கல்வி கனவு நிறைவேறியதா? மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் கல்வி என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? கலெக்டராக வரும் அருள்நிதி அந்த மக்களுக்காக என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மலைவாழ் மகனாக ஆரவ் மிக இயல்பாக நடித்துள்ளார். அவரது உடல்மொழி, பேச்சு, தோற்றம் என அனைத்தும் அந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. பல காட்சிகளில் அவர் உண்மையிலேயே அந்த சமூகத்தைச் சேர்ந்தவராகவே தோன்றுகிறார். ரம்யா பாண்டியனுக்கும் சிறிய கதாபாத்திரம் என்றாலும், கதைக்கு தேவையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தாயின் அன்பு, குடும்பத்தின் மீதான அக்கறை ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

    படத்தின் மிகப்பெரிய பலம் குறிஞ்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுமிதான். எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல், தனது கண்கள் மற்றும் முகபாவனைகளால் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். படிக்க வேண்டும் என்ற ஏக்கம், தாத்தாவை இழந்த சோகம், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற உறுதி என ஒவ்வொரு உணர்வையும் சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுகிறார். அருள்நிதி இந்தப் படத்தில் முழுநீள நாயகனாக இல்லாமல், Extended Cameo கதாபாத்திரத்தில் மட்டுமே வருகிறார். இருந்தாலும், கலெக்டராக அவர் வரும் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகின்றன.

     நேர்மையான அரசு அதிகாரி ஒருவர் மக்களின் பிரச்சினையை நேரில் சென்று பார்த்து தீர்க்க நினைத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அவரது கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் அழகாக பதிவு செய்துள்ளார். ஜான் விஜய் மீண்டும் வில்லத்தனமான அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தனது அனுபவத்தால் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், அவருக்கு தொடர்ந்து இதேபோன்ற எதிர்மறை கதாபாத்திரங்களே வழங்கப்படுவது ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது.

    arulvan-movie-review

    படத்தின் முதல் பாதி முழுவதும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், சடங்குகள், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதிலேயே செல்கிறது. பல படங்களில் காட்டப்படுவது போல போலீஸ் கொடுமை, அதிகாரிகளின் அத்துமீறல் போன்ற வழக்கமான காட்சிகளுக்குப் பதிலாக, அவர்களின் கலாச்சாரத்தை மையமாக வைத்து இயக்குநர் காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

    ஆனால், முதல் பாதியில் கதையின் வேகம் சற்று குறைவாக இருப்பதால் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. இரண்டாம் பாதியில்தான் படம் முழுமையாக வேகம் பிடிக்கிறது. குறிஞ்சி கல்விக்காக போராடுவது, கலெக்டரை சந்திப்பது, அதன் பிறகு அருள்நிதி நேரடியாக கிராமத்திற்கே சென்று மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்வது, ஒரு குழந்தையின் கல்வி கனவு ஒரு முழு கிராமத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்பதை உணர்ச்சிகரமாக சொல்வது போன்ற காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

    கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றும் சக்தி என்பதை எந்தவித பிரசாரமும் இல்லாமல் திரைக்கதையின் மூலம் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தனியாகவே பாராட்டப்பட வேண்டியவர். மலைகள், காடுகள், மழை, இயற்கை எழில் என ஒவ்வொரு காட்சியும் பெரிய திரையில் ரசிக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது. பல காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. ஜி.வி. பிரகாஷ் இசை படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. பின்னணி இசை பல முக்கியமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. பாடல்களும் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் பயணிக்கின்றன.

    எடிட்டிங் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என்ற சிறிய குறை இருந்தாலும், மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாக படம் திருப்தி அளிக்கிறது. 'அருள்வான்' வெறும் பொழுதுபோக்கு திரைப்படமாக இல்லாமல், கல்வியின் முக்கியத்துவத்தை மனதைத் தொடும் வகையில் பதிவு செய்யும் சமூகப் படைப்பாக திகழ்கிறது. முதல் பாதியில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகளாலும், வலுவான கருத்தாலும் அதை ஈடுகட்டுகிறது.

    arulvan-movie-review

    ஆரவின் இயல்பான நடிப்பு, குறிஞ்சியாக நடித்த சிறுமியின் அசத்தலான பங்களிப்பு, அருள்நிதியின் கம்பீரமான சிறப்பு தோற்றம், கண்கவர் ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி. பிரகாஷின் இசை ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. மொத்தத்தில், 'அருள்வான்' கல்வியின் அருமையையும், ஒரு குழந்தையின் கனவு ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்யும் தரமான திரைப்படம். சமூக அக்கறையுள்ள படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இது திகழ்கிறது.

    இதையும் படிங்க: என்னுடைய ஆள் எப்பையுமே அஜித்தான்.. இப்பவும் செம அழகாக இருக்காரு..!! மனம் திறந்த நடிகை மீனா.. வைரலாகும் பேட்டி..!

    மேலும் படிங்க
    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியை பற்றி தெரியாதா.? சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு..! சீரமைக்கும் முதல்வர்... தவெக பெருமிதம்..!!

    திமுக ஆட்சியை பற்றி தெரியாதா.? சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு..! சீரமைக்கும் முதல்வர்... தவெக பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியை பற்றி தெரியாதா.? சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு..! சீரமைக்கும் முதல்வர்... தவெக பெருமிதம்..!!

    திமுக ஆட்சியை பற்றி தெரியாதா.? சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு..! சீரமைக்கும் முதல்வர்... தவெக பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share