தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் இப்போது பெரிதும் பேசப்படும் படம் என்றால் அதுதான் ‘மாரீசன்’. இந்தப் படத்தை சிறப்பாக்கும் முக்கிய காரணங்கள் என்றால் இரண்டு பேர், அது யார் என்றால் தமிழ் சினிமாவின் காமெடி மன்னர் வடிவேலு மற்றும் மலையாள சினிமாவின் நடிப்புக்காக புகழ் பெற்ற ஃபஹத் பாசில் ஆகியோர் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருப்பதே மிகப்பெரும் இன்ப அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு இருந்தது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான ‘மாரீசன்’ திரைப்படம், வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதை, திரைக்கதை, வசனங்களை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. அவர் இப்படத்தின் கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை உலகில் தனக்கென ஓர் அடையாளம் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஒரு மறதி நோயாளி மற்றும் ஒரு திருடன் ஆகிய இருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களது பேராதரவை வழங்கி வருகின்றனர். மனித உணர்வுகளின் நுணுக்கங்களை நயமாகக் காட்சிப்படுத்திய இந்த படம், வெறும் வேடிக்கை அல்லாமல் சிந்திக்கவும், உணரவும் வைக்கும் வகையில் உள்ளது என பலரும் புகழ்ந்துவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இப்படத்தை பார்த்த பிறகு தனது அனுபவத்தைத் திறந்த மனதுடன் பகிர்ந்து படக்குழுவினரை முழுமையாக பாராட்டியுள்ளார். அவர் தனது பாராட்டுச் செய்தியில், " வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளது. அவர் உடைந்த அந்த தருணத்தில்... ஆஹா... என்ன ஒரு அற்புதமான நடிகர் என்பதை காட்டிவிட்டார்.” என உருக்கமாகக் கூறியுள்ளார். இது வடிவேலுவின் நடிப்பு திறமைக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகவும், மீண்டும் அவர் ரசிகர்களின் கவனத்தில் நிலையாக திகழும் வகையிலும் அமைந்துள்ளது.
அதேபோல், ஃபஹத் பாசிலின் நடிப்பையும் ஷங்கர் பாராட்டியுள்ளார். அதன்படி அவர் பேசுகையில், " ஃபஹத் ஃபாசில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அருமையான படத்தை கொடுத்த இயக்குநர் சுதீஷ் சங்கர் மற்றும் படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என முழுமையான பாராட்டையும் வழங்கியுள்ளார். இயக்குனர் ஷங்கர் போன்ற தரமான, தொழில்நுட்பத் திறமையால் புகழ்பெற்ற இயக்குநரிடம் இருந்து இப்படி நேரடி பாராட்டு பெறுவது, 'மாரீசன்' படக்குழுவுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கே ஒரு பெருமையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "எந்திரன்" திரைப்படத்தின் கதை உரிமை விவகாரம்..! ஐகோர்ட்டில் பரிசீலனை செய்யப்பட்ட இயக்குனர் சங்கரின் வழக்குகள் ..!
‘மாரீசன்’ படத்தின் வெற்றியும், அதனை சுத்தமான மனதுடன் பாராட்டும் மற்ற திரைப்பட கலைஞர்களின் பாராட்டும், தமிழ்த்திரையுலகில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரக்கூடிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. ஃபஹத் பாசில், வடிவேலு இருவரும் பங்களித்த இந்த பயணம், தமிழ் சினிமாவின் தரத்தையும், மாறுபட்ட கலைபாடல்களையும் மேம்படுத்தும் வழியில் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் வாயிலாக ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்னெவெனில் காமெடியில் மட்டுமல்ல, குணச்சித்திரத் தளத்தில் வடிவேலுவை பார்ப்பதற்கும், ஃபஹத் பாசிலின் நடிப்பை மற்றொரு மொழி பார்வையில் அனுபவிப்பதற்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பாக உள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஒருசேர 'மாரீசன்' படத்திற்கு பாராட்டுகளை வழங்கி வருகின்றனர். படத்தின் தீவிரமான கதைக்களம், நடிப்பு மற்றும் இசை என அனைத்தும் சேர்ந்து, இதுவரை தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இப்படம் உள்ளது என சொல்லலாம்.

இதைப் போலவே, ‘மாரீசன்’ தொடர்ந்து வெற்றிக்கண்டு வருவதால் படக்குழுவின் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் கூடுதல் உற்சாகத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..!