தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் எந்தப் படம் வெளியானாலும், முதல் காட்சியிலேயே திரையரங்கில் திருடி படம் பிடித்து, ஆன்லைனில் பதிவேற்றும் பழக்கம் பரவியுள்ளதால், திரையுலகில் பல வருடங்களாக பெரும் அதிர்ச்சி உருவாகி இருந்தது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் tamilmv.pink மற்றும் tamilprint.com, இதற்குத் தலைமை வகித்து, புதிய திரைப்படங்களை சூட்டோடு சூடாக ஆன்லைனில் பதிவேற்றி வருவதாகத் தெரியவந்தது.
இவர்களது செயல்கள், திரையுலகினரின் வருமானத்துக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி, புதிய படங்களுக்கு எதிரான பெரும் வேட்டையாக மாறியுள்ளது. இதே போன்று, தெலுங்கு பட உலகிலும் iBomma.com எனும் இணையதளம் பப்பம் டிவி என்ற பெயரில் திருட்டு திரைப்படங்களை வெளியிட்டு வந்தது. 24 மணி நேரமும் எந்தவொரு படத்தையும் பதிவிறக்கம் செய்யாமல் பார்க்கும் வசதியை தளத்தில் வழங்கி, ரசிகர்களை கவர்ந்தது. இதன் மூலம், திரையுலகின் வருமானத்துக்கு பெரும் கேடு விளைவிக்கப் பட்டது. விசாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரவி என்கிற iBomma ரவி, இந்த திருட்டு இணையதளத்தை இயக்கி வந்தவர் என போலீசார் கூறினர். வெளிநாட்டு IP-ஐ பயன்படுத்தி தளத்தை இயங்கி வைத்ததால், உடனடியாக முடக்க இயலவில்லை. பல நாடுகளில் பதுங்கி இருந்த ரவியை லுக் அவுட் நோட்டீஸ் மூலம் தேடி பிடித்தனர்.
கரீபியன் நாடுகள் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிச் குடியுரிமை பெற்ற ரவி அங்கேயே தங்கி இருந்தார். இப்படி இருக்க ரவியின் செயல்கள் பல்வேறு நாடுகளின் சர்வர்கள் வழியாக நடைபெற்று வந்தது. புதிய திரைப்படங்களை எந்தவித அனுமதியுமின்றி வெளியிட்டு வந்த ரவி, தனது வெப்சைட் மற்றும் ஆன்லைன் டிவி தளங்களில் படங்களை பதிவேற்றியுள்ளார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதையும் படிங்க: அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையில் நடிகர் தனுஷை இழுத்துவிட்ட நடிகை..! மான்யா ஆனந்த் வீடியோவால் பரபரப்பு..!

ஹைதராபாத் அருகே ரவிக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு மற்றும் சுமார் ரூ.3.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்யும் முயற்சியில், செயின்ட் கிட்ஸ் நாட்டிலிருந்து ஹைதராபாத் வந்த ரவியை மாநில சைபர் கிரைம் போலீசார் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்தனர். ரவியின் ஹார்ட் டிஸ்கில் 21,000 திரைப்படங்கள் சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மூலம், அவர் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட விளம்பரங்களின் மூலம் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார். 2019ல் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களைப் பார்த்து iBomma.com தளம் தொடங்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் ரவி திரையரங்குகளில் படம் பிடித்து பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.
படத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, முதல் பதிவேற்றும் நபருக்கு ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை பணம் அனுப்பியதாகவும் தெரியவந்தது. குறுகிய காலத்தில், இந்த திருட்டு வீடியோ தொழில் மூலம் ரவி ரூ.20 கோடி வருமானம் ஈட்டியதாகவும், சராசரியாக மாதம் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதன் பின்னணியில், ரவி நடத்தி வந்த iBomma, பப்பம் டிவி உள்ளிட்ட இணையதளங்களை போலீசார் முடக்கி வைத்தனர். இதனால், திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, சமூக ஊடகங்கள் கலக்கமடைந்துள்ளன. இந்த சம்பவம், திரைப்படங்களை திருடி ஆன்லைனில் வெளியிடும் பழக்கம் மற்றும் அதனால் உருவாகும் பெரும் வருமான இழப்புகளை வெளிப்படுத்துவதை சுட்டி காட்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் இது செய்தியாக பரவி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதிய திருப்பங்களைத் தந்துள்ளது. இதைப் பார்த்து திரையுலகும், சட்ட அதிகாரிகளும், இணையதளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் iBomma ரவி சம்பவம், திரைப்பட வருமான பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், சட்ட நடவடிக்கையின் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டுகிறது. மொத்தத்தில் படத்தை திருட்டு தனமாக பார்க்கும் நபர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தாலும், பலகோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: என்ன பார்த்தா எப்படி தெரியுது.. ட்ரோல் பண்ணுவாங்கலாமே..! நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்ட்ரிக்ட் ஸ்பீச்..!