• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வின்டேஜ் விஜய்யை பார்க்கிற மாதிரி இருக்கு.!! ஜேசன் சஞ்சய் குறித்து டிடி சொன்ன அந்த வார்த்தைகள்.. ரசிகர்கள் கவனம்..!

    ஜேசன் சஞ்சய் குறித்து டிடி பெருமையாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Thu, 01 Oct 2026 12:33:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-jason-sanjay-dd-praises-vijays-son-says-hes-very-talented-and-has-a-good-naturetamilcinema

    தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் கவனம் பெற்றுவரும் இளம் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். நடிகர் விஜய்யின் மகனான இவர், தனது தந்தையின் அடையாளத்தை மட்டும் நம்பாமல் இயக்குநராக தனக்கென ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இயக்குநராக அவர் அறிமுகமாகும் திரைப்படம் என்பதால், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தாண்டி ஜேசன் எப்படி படத்தை கையாண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமானது முதலே அவரது தந்தை விஜய் தொடர்பான பேச்சுகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருவதால் சினிமாவில் இருந்து விலகியிருப்பதுதான்.

    விஜய் அரசியலுக்கு வந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஒருபுறம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் அவர் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்ற நிலை பல ரசிகர்களுக்கு சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவுக்குள் வருவது ரசிகர்களுக்கு ஒரு வகையில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுக அறிவிப்பு வெளியான பிறகு, விஜய் தரப்பிலிருந்து வெளிப்படையான வாழ்த்து எதுவும் வராதது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. அதுமட்டுமின்றி, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அல்லது ஜேசனின் படப்பணிகள் தொடர்பாக விஜய் பேசும் தகவல்கள் அதிகம் வெளியாகாததால், சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் பரவத் தொடங்கின.

    இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் அடுத்த அதிரடி ட்விஸ்ட்..!! Eviction Free Pass வென்ற 3 பேர் இவர்களா?... குமரனின் ரூ.5 லட்சம் பணப்பெட்டி முடிவால் பரபரப்பு..!

    jason-sanjay-dd-praises

    ஒரு கட்டத்தில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக, படத்தின் அப்டேட்களில் ஜேசன் சஞ்சய் தனது பெயருடன் தொடர்புடைய இனிஷியலை தவிர்த்தது போன்ற விஷயங்களையும் சிலர் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, ஜேசனின் இயக்குநர் வாய்ப்பு குறித்து பல்வேறு விதமான பேச்சுகள் கிளம்பின. அவருக்கு இந்த வாய்ப்பை அவரது தாயார் சங்கீதாதான் பெற்றுக்கொடுத்தார் என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவின.

    ஆனால், படத்தின் பணிகள் நிறைவடைந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ளத் தொடங்கியபோது, இந்த விவகாரங்களுக்கு அவருடைய பேட்டிகளே பதிலாக அமைந்தன. தனக்கும் தனது தந்தை விஜய்க்கும் இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என்பதை ஜேசன் தனது பேட்டிகளில் தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், தனது சினிமா பயணம் குறித்து விஜய் தனக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

    ஜேசன் கூறிய தகவலின்படி, விஜய் அவரிடம், “உனக்கு என்ன வேண்டுமோ அதை நீயே முடிவு செய்துவிட்டு என்னிடம் வந்து கேள். நானாக எதுவும் வந்து உனக்கு ஊட்ட மாட்டேன்” என்ற வகையில் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. தனது வாழ்க்கையில் தந்தை எப்படி வழிகாட்டுகிறார் என்பதையும், அதே நேரத்தில் தனது முடிவுகளை தானே எடுக்க வேண்டும் என்பதையும் ஜேசன் சஞ்சய் பேட்டிகளில் எடுத்துக்கூறியிருந்தார். இதன் மூலம், “விஜய் தனது மகனுக்கு எதுவுமே செய்யவில்லை” என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்ட கருத்துகளுக்கு அவர் தனது பேச்சின் மூலம் விளக்கம் அளித்தார்.

    அதேபோல், விஜய் முதலமைச்சராகும் சூழ்நிலை தன்னையும் தனது குடும்பத்தையும் மிகப்பெரிய பொறுப்புக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்திருந்தார். அரசியல் என்பது விஜய்யின் வாழ்க்கையில் மட்டுமின்றி, குடும்பத்தினருக்கும் பல்வேறு பொறுப்புகளை ஏற்படுத்தும் விஷயம் என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பது அவரது பேட்டிகளில் வெளிப்பட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

    jason-sanjay-dd-praises

    ஜேசனின் இந்தப் பேட்டிகளுக்குப் பிறகு, விஜய் ரசிகர்களிடையே நிலவிய பல்வேறு சந்தேகங்கள் ஓரளவுக்கு குறைந்தன. குறிப்பாக அவர் பேசிய விதம், கேள்விகளுக்கு பதிலளித்த விதம், பொது நிகழ்ச்சிகளில் நடந்து கொண்ட விதம் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    சில விஜய் ரசிகர்கள், ஜேசனை பார்க்கும்போது விஜய்யின் ஆரம்பகால தோற்றமும் பாணியும் நினைவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது எளிமையான அணுகுமுறையும், பேட்டிகளில் வெளிப்படும் பக்குவமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்களில் ஒரு பகுதியினரும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் பிரபல தொகுப்பாளினி டிடி, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் சூரியை பேட்டியெடுத்தபோது ஜேசன் சஞ்சய் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அப்போது ஜேசன் சஞ்சய் குறித்து சூரியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். சூரி ஜேசன் குறித்து பேசியதை தொடர்ந்து டிடியும் அவரைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “ஜேசன் ரொம்ப திறமையான பையன். அவருக்கு ரொம்ப நல்ல குணம். நல்ல தம்பி. அருமையாக வளர்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன வளர்த்தாலும் உள்ளே அவருக்குள் ஒன்று இருக்கும்தானே. அதை பார்க்கும்போது இந்தத் தம்பி நல்லா வரணும் என சொல்ல தோன்றுகிறது” என்று டிடி கூறியுள்ளார்.

    டிடியின் இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக ஜேசன் சஞ்சயின் குணம் மற்றும் அவருடைய அணுகுமுறை குறித்து டிடி நேர்மறையாக பேசியிருப்பது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளத்தை தாண்டி, இயக்குநராக தனது முதல் படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் ஜேசன் சஞ்சய் இருக்கிறார். அதனால் ‘சிக்மா’ திரைப்படம் அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெற்றி என்பது வசூலை மட்டும் பொறுத்தது அல்ல; ஒரு புதிய இயக்குநராக ஜேசன் சஞ்சய் என்ன சொல்ல வந்திருக்கிறார், சந்தீப் கிஷனை அவர் எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார், கதை மற்றும் திரைக்கதையை எந்த அளவுக்கு கையாண்டிருக்கிறார் என்பதையும் ரசிகர்களும் விமர்சகர்களும் கவனிக்க உள்ளனர்.

    jason-sanjay-dd-praises

    இந்நிலையில், சூரியின் வாழ்த்தும், டிடியின் பாராட்டும் ஜேசன் சஞ்சய் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நாளை ‘சிக்மா’ திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தந்தை விஜய்யின் நிழலை தாண்டி, இயக்குநராக ஜேசன் சஞ்சய் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவாரா என்பதற்கான முதல் பதிலை ‘சிக்மா’ திரைப்படம் கொடுக்க இருக்கிறது.

    இதையும் படிங்க: அதிரடியாக விளம்பரத்தில் களமிறங்கும் அஜித்குமார்..!! படத்தை விட அதிக சம்பளமாம்.. கர்வத்தில் AK ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா

    செய்திகள்

    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா
    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share